விருச்சிகம் ராசி விகாரி தமிழ் புத்தாண்டு பலன்கள் 2019

0
1171
தமிழ் புத்தாண்டு பலன்கள், தமிழ் புத்தாண்டு பலன்கள் 2019, தமிழ் புத்தாண்டு பலன்கள் விகாரி வருடம், தமிழ் புத்தாண்டு பலன்கள் விகாரி வருடம் 2019, தமிழ் புத்தாண்டு பலன்கள் விகாரி வருடம் விருச்சிகம், தமிழ் புத்தாண்டு பலன்கள் விகாரி வருடம் விருச்சிகம் 2019, விருச்சிகம் ராசி விகாரி வருட பலன்கள், விருச்சிக ராசி புத்தாண்டு பலன்கள், விருச்சிக ராசி புத்தாண்டு பலன்கள் 2019, விருச்சிக ராசி விகாரி வருட பலன்கள், விகாரி வருட விருச்சிக ராசி பலன்கள், விகாரி வருட விருச்சிகம் ராசி பலன்கள், விகாரி வருட ராசி பலன்கள், விகாரி வருட புத்தாண்டு ராசி பலன்கள், tamil puthandu palankal, tamil varuda puthandu palangal, 2019 tamil puthandu palangal, vigari varuda rasi palangal, viruchigam rasi tamil puthandu palangal, viruchiga rasi tamil puthandu palangal,

வித்தியாசமான  கோணத்தில் விகாரி வருட விருச்சிகம் ராசி பலன்கள் 2019-2020

Table of Contents

சுய ஜாதகப்படி நற்பலன்கள் அளவு மற்றும் கெடுபலன்கள் அளவு – உங்களுக்கு நீங்களே அறிந்துகொள்ளும் சூட்சமத்துடன்  

விருச்சிகம் ராசி விகாரி தமிழ் புத்தாண்டு பலன்கள் பொதுவாக சொல்லப்படும் யாவும், அனைவருக்கும் நடக்குமா என்ற கேள்வி வந்தால், பதில் இல்லை என்பதே. சொல்லப்படும் பலன்கள் சுய ஜாதகத்தின் தசாபுத்தி பொருத்து மாறும் என்பது உண்மையே.

இருந்தாலும் இன்னொரு சூட்சமமும் உள்ளது. அந்த சூட்சமத்தையும் அதன்படி பலன்கள் நடக்கும் அளவை அறிந்து கொள்ள அன்பர்கள் புரிந்துகொள்ள வேண்டி பலன்களின் தோராயமான அளவை மதிபெண்ணில் தரபட்டுள்ளது.

முதலில் பலன்களையும் பின்பு யார்யாருக்கு எந்த அளவு பலன்கள் கிடைக்கும் என்பதனையும் பார்ப்போம்

விருச்சிகம் ராசி விகாரி தமிழ் புத்தாண்டு பலன்கள் 2019-2020

வருட பலன்களை நிர்ணயிக்க உதவும் குரு மற்றும் சனி போன்ற முக்கியமான     கிரகங்கள் அனைத்தும் பெயர்ச்சி காண போகும் இந்த விகாரி வருடத்தில், சர்ப்ப கிரகங்கள் என்று சொல்லபடும் ராகு-கேதுக்கள் முன்னமே பெயர்ச்சி கண்டுள்ள நிலையில் முக்கோண தரப்பில் பலன்கள் தர காத்துள்ளது இந்த தமிழ் புத்தாண்டான விகாரி தமிழ் புத்தாண்டு.

இதில், விகாரி பிறப்புக்கு சில வாரங்கள் முன்னமே மார்ச் மாதத்தில் பெயர்ச்சி கண்டுவிட்ட ராகு-கேதுக்கள், உங்கள் விருச்சிகம் ராசிக்கு முறையே எட்டு-இரண்டு என்ற ஸ்தானங்களில் அமர்ந்துவிட்ட நிலையில், விகாரி ஆண்டு மத்தியில் நவம்பர் மாதத்தில் நடக்கும் பெயர்ச்சி மூலம் குரு, தனது ஆட்சி வீடான தனுசிலும் (ராசிக்கு இரண்டாம் அதிபதி ஆட்சி பலம் பெற்று – இரண்டில்), அதற்கடுத்து வரும் ஜனவரி மாதத்தில் நடக்கும் பெயர்ச்சி மூலம் சனியும் தனது ஆட்சி வீடான மகரத்தில் (ஆட்சி பலம் பெற்று ராசிக்கு மூன்றாம் அதிபதி -மூன்றில்) அமரவுள்ளனர்.

விருச்சிகம் ராசி அன்பர்கள் தனது ஏழரைச்சனியின் இறுதி கட்டத்தில் பயணிக்கபோகும் விகாரி வருடம் இது.

கடந்த 8 வருடங்களுக்கு மேலாக நீங்கள் அனுபவித்து வந்த துயரங்களில் இருந்து உங்களை கடைதேற்றி, அடுத்த வருடத்தில் இருந்து உங்களுக்கு நடக்கவிருக்கும் நன்மைகளுக்கு அஸ்திவாரத்தையும் அமைத்து தரும் வருடமாக இந்த வருடம் உங்களுக்கு இருக்கபோகிறது

சனிக்கு பகை கிரகமான செவ்வாயின் ராசியான விருச்சிகத்திற்கு ஏழரைச்சனியின் தாக்கத்தால், கடந்த சில வருடங்களாக நடந்த ராகு-கேது, குருப்பெயர்ச்சிகள் எதுவும் விருச்சிகத்திற்கு நன்மை, தீமைகளை செய்யவில்லை.

இனிமேல் அந்த நிலை மாறி மற்ற வருடக்கிரகங்கள் மூலமும் இனி உங்களுக்கு நன்மைகள் இருக்கும்.

ஏழரைச்சனியின் இறுதி கட்டத்தில் இன்னொரு நற்பலனாக குருபகவான் தங்களின் ராசிக்கு இரண்டாம் இடத்தில், விகாரி வருடத்தின் மத்தியில் வந்து அமரவுள்ளார்.

இது உங்களுக்கு மேலும் வலு சேர்க்கும் அமைபப்பு என்பதால், இந்த வருடம் முடிவில் உங்களுக்கு தித்திப்பான சம்பவங்கள் நடைபெற காத்திருக்கிறது

பொருளாதாரம்

இதுவரை பணவிஷயத்தில் புரட்ட முடியாமல் கஷ்டப்பட்டுக் கொண்டிருந்தவர்கள் இனிமேல் சிறிதளவு முயற்சி, பெரிதளவு அதிர்ஷ்டம், அதனால் நல்ல மேம்பாடான நிலை ஆகியவற்றை கண்கூடாக காண்பீர்கள்.

நினைத்த காரியங்கள் நினைத்தபடியே நிறைவேறும். எந்த ஒரு செயலையும் உடனுக்கு உடன் நிறைவேற்ற முடியும். வாக்குப் பலிதம் ஏற்படும்.

இதுவரை நடக்காமல் இருந்த நல்ல விஷயங்கள், தாமதமாகிப் போனவைகள் அனைத்தும் நல்லபடியாக நடந்து உங்களுக்கு மகிழ்ச்சியையும், வருமானத்தையும், புகழையும் தரும்.

குடும்பத்தில் இருந்து வந்த பிரச்சினைகள் தீரும். கணவன் மனைவி உறவு நல்லபடியாக மாறும். கருத்து வேறுபாடு, குடும்ப பிரச்னைகள் அல்லது வேலை விஷயமாக பிரிந்து இருந்த தம்பதியினர் ஒன்று சேர்வார்கள்.

வேறு வேறு இடங்களில் பணிபுரிந்த கணவன், மனைவிக்கு ஒரே இடத்தில் பணிமாறுதல் கிடைத்து குடும்பம் ஒன்று சேரும்.

உடல்நலம் சரியில்லாமல் இருந்தவர்களின் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் தெரியும். இதுவரை குரு பகவானால் இருந்து வந்த விரயச் செலவுகள் இனிமேல் இருக்காது.

எனவே ஏதேனும் ஒரு தொகையை அது சிறியதாக இருந்தாலும் சேமிக்க முடியும்.

கும்பாபிஷேகம் போன்ற ஆலயத் திருப்பணிகளில் பங்கேற்கும் பாக்கியம் கிடைக்கும். இதுவரை தரிசிக்காத புனிதத்தலங்களுக்கு சென்று திரும்புவீர்கள்.

ஞானிகள் மகான்களின் தரிசனம் கிடைக்கும். ஆன்மீக நாட்டம் அதிகமாகும். அறப்பணிகளில் ஆர்வம் அதிகரித்து ஈடுபாடு காட்டுவீர்கள்.

குடும்பத்தில் மங்கள காரியங்கள் நடக்கும் என்பதால் வருமானம் வந்தாலும் அதற்கு ஏற்ப சுபச் செலவுகளும் இருக்கும். சொத்து வாங்குவீர்கள்.

மனைவிக்கு நகை, பெண்குழந்தைகளின் திருமணத்திற்கென்று நகைசேமிப்பு போன்றவைகளை இப்போது செய்ய முடியும்.

பெண்கள்

பெண்களுக்கு இந்த வருடம் மிகப்பெரிய மேன்மைகளை அளிக்கும் என்பது உறுதி. வேலை செய்யும் இடங்களில் இதுவரை இருந்து வந்த மனக்கசப்புகள் அனைத்தும் நல்லபடியாகத் தீர்ந்து உங்களுடைய அதிகாரங்களும் மேலாண்மையும் நிலைநாட்டப் படும்.

இதுவரையில் வீட்டிலும், அலுவலகத்திலும் இருந்து வந்த அனைத்து பிரச்னைகளும் நல்ல படியாக உங்களுக்கு சாதகமாக முடிவுக்கு வந்து நிம்மதி அடைவீர்கள்.

தொலைக்காட்சி, சினிமாத்துறை போன்ற ஊடகங்களில் இருக்கும் கலைஞர்கள், பத்திரிகைத்துறையினர், வாகனங்களை இயக்குபவர்கள்,  அன்றாடம் சம்பளம் வாங்குபவர்கள், வெளிநாட்டுத் தொடர்புடையவர்கள், கணிப்பொறி சம்பந்தப்பட்டோர், சொல்லிக் கொடுப்போர்  போன்ற அனைத்துத் தரப்பினருக்கும்  இந்த வருடம்  நல்ல பலன்களையே தரும்.

இதுவரை வாகனம் அமையாதவர்களுக்கு வாகனம் அமையும். இருக்கும் வாகனத்தை விற்று விட்டு நல்ல வாகனம் வாங்க முடியும்.

வாகன யோகம் வந்து விட்டதால் வாங்க வேண்டும் என்று நினைத்திருந்த அதே மாடலில் புதிய வாகனம் வாங்குவீர்கள். சொகுசு வாகனம் வாங்குவதற்கும் அமைப்பு இருக்கிறது.

வேலை

[wp_ad_camp_3]

அரசு வேலை பெற தேர்வு எழுதி வெற்றி பெற்ற பின்பும், வேலையில் சேர காத்திருக்கும் அன்பர்களுக்கு இந்த வருடம் தித்திப்பை தரவுள்ளது.

உங்களின் சுய ஜாதகத்தில் அரசு வேலை அமைத்து தரும் கிரகங்கள் சரியான இடத்தில் சுப வலிமை பெற்று அமர்ந்திருக்கும் பட்சத்தில், தகுந்த தசாபுத்தி அமைப்புகள் நடப்பில் இருக்குமேயானால் நிச்சயம் அரசு வேலையில் உங்களை அமர வைக்கும் வருடமாக இந்த விகாரி வருடம் இருக்கும்.

அலுவலகத்தில் இதுவரை புரமோஷன் கிடைக்காதவர்கள் பதவிஉயர்வு கிடைக்கப் பெறுவார்கள். நிலுவையில் இருந்த சம்பள உயர்வு உடனடியாகக் கிடைக்கும்.

இதுவரை உங்களை முறைத்துக் கொண்டிருந்த மேலதிகாரி மாறுதலாகி உங்களுக்கு சாதகமான, உங்களைப் புரிந்து கொள்ளும் நபர் உங்களுக்கு அதிகாரியாக வருவார்.

அதிர்ஷ்ட பலன்கள்

கடன் தொல்லையால் அவதிப்பட்டவர்களுக்கு கடனை தீர்க்கக் கூடிய அமைப்புக்கள் உருவாகும். ஒரு சிலர் புதிய கடன்கள் பெற்று பழைய கடன்களை அடைப்பீர்கள்.

இனிமேல் கடன்கள் கஷ்டங்களைத் தராது. உடல்நலம் சரியில்லாமல் இருந்தவர்கள் ஆரோக்கியம் திரும்பக் கிடைக்கப் பெறுவீர்கள்.

வெளிநாடு சம்பந்தப்பட்ட அனைத்து விஷயங்களும் உங்களுக்கு கை கொடுக்கும். வெளிநாட்டில் படிக்கவோ, வேலை செய்யவோ முயற்சிப்பவர்களுக்கு உடனடியாக விசா கிடைக்கும்.

இதுவரை வெளிநாடு செல்லாதவர்கள் இப்போது வெளிநாட்டுப் பயணம் செல்லும்படி இருக்கும். பயணங்கள் மூலம் நன்மைகள் இருக்கும்.

இதுவரை வீடு வாங்க தடை இருந்தவர்களுக்கு இந்த தடை நீங்கி நல்ல வசதியான ஆடம்பர வீடு அமைய போகிறது.

வாடகை வீட்டில் இருப்பவர்கள் இனிமேல் குத்தகை அடிப்படை வீட்டிற்காவது மாற முடியும். நீண்ட நாட்களாக சொந்தவீடு வாங்க வேண்டும் என்ற எண்ணத்தில் இருப்பவர்களின் ஆசை இப்போது நிறைவேறும்.

வீடு சம்பந்தப்பட்ட அனைத்துக் காரியங்களும் நினைத்தபடியே நிறைவேறும். வீடு கட்ட ஆரம்பித்து பாதியில் நிறுத்தியவர்கள் முழுதாக முடித்து கிரகப் பிரவேசம் செய்வீர்கள்.

எதிர்கால முதலீடாக குழந்தைகள் பெயரிலோ அல்லது உங்கள் பேரிலோ வீட்டுமனை வாங்குவீர்கள். வங்கிக்கடன் வாங்கி வீடு கட்டவோ நல்ல பிளாட் வாங்கவோ முடியும்.

பூர்வீக சொத்தில் இதுவரை இருந்துவந்த வில்லங்கம் விலகும். பாகப் பிரிவினைகள் சம்பந்தமாக வழக்கு உள்ளவர்களுக்கு தீர்ப்பு சாதகமாக வரும். பங்காளிச்சண்டை தீரும்.

தந்தைவழி உறவினர்கள் ஆதரவு கிடைக்கும். தந்தையிடம் இருந்து உதவிகளோ பொருள் வரவுகளோ இருக்கும்.

தன்னம்பிக்கை மனதில் குடி கொள்ளும். தலை நிமிர்ந்து நடப்பீர்கள். உங்களுடைய கௌரவம், அந்தஸ்து கூடும்படியான சம்பவங்கள் நடக்கும். கையில் பணப்புழக்கம் அதிகரித்து குடும்பத்தில் உங்களுடைய சொல்லை அனைவரும் கேட்கும் நிலை உருவாகும்.

காதல், திருமணம், குடும்பம்

திருமணமாகாத இளைய பருவத்தினருக்கு திருமண காலம் கூடி வந்து விட்டது. தடைகள் நீங்கி வரன்கள் கூடிவந்து உடனடியாக திருமணம் நடக்கும்.

காதலித்துக் கொண்டிருந்தவர்களுக்கு பெற்றோர் சம்மதம் கிடைக்கும். இளைய பருவத்தினருக்கு புதிதாக காதலிக்க ஆரம்பிப்பீர்கள்.

அது கைகூடும் காதலாகவும் இருக்கும். உங்களின் எதிர்கால வாழ்க்கைத் துணைவரை இந்த வருடம் சந்திக்கும் வாய்ப்பு இருக்கிறது. சிலருக்கு இந்த வருடம் அறிமுகமாகும் நபர் ஒருவர் உங்கள் வாழ்நாள் முழுவதும் உங்களுக்கு தொடரும் உறவாக மாறுவார்

கணவன் மனைவி உறவு சந்தோஷமாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியும், சுபிட்சமும் இருக்கும். மனைவிக்கு நகை வாங்கி கழுத்தில் போட்டு அழகு பார்க்க முடியும்.

குழந்தைகளின் எதிர் காலத்துக்கு முதலீடு செய்ய முடியும். பிள்ளைகள் விரும்பிய பள்ளி, கல்லூரிகளில் அவர்களை சேர்க்க முடியும்.

சனி விலகியதும் வாழ்க்கை நல்லவிதமாக அமையும் என்பதால் மற்ற ராகு,கேது மற்றும் குருப்பெயர்ச்சிகள் கை கொடுக்காவிட்டாலும் ஏழரைச்சனி இந்த வருடத்தோடு முடியப் போவதால் விருச்சிக ராசிக்காரர்கள் துயரங்களில் இருந்து வெளியே வந்தே ஆக வேண்டும்.

அந்த வகையில் பிறக்க இருக்கும் புத்தாண்டு உங்களுக்கு சந்தோஷங்களை மட்டுமே தருகின்ற வருடமாக இருக்கும்.

விருச்சிகம் ராசி விகாரி புத்தாண்டு பலன்கள் உங்களில் யாருக்கு நடக்கும்? யாருக்கு நடக்காது?

நன்மைகள் எவ்வளவு? தீமைகள் எவ்வளவு?

மேலே சொன்ன பலன்கள் யாவும், விருச்சிகம் ராசியில் பிறந்த அனைவருக்கும் நடக்குமா என்ற கேள்வி வந்தால், பதில் இல்லை என்பதே.

இதற்கு மூலகாரணமாக அவரவர்களின் சுய ஜாதகத்தில் நடக்கும் தசாபுத்தி பொறுத்தே பலன்கள் நடக்கும் என்பது மட்டுமல்ல. மற்றொரு கூடுதல் காரணமாக பின்வரும் லிங்க்-ல் சொல்லப்ட்டுள்ள விதிகளை பொருத்தி பாருங்கள். அவை பொருந்தும் விதம் பொருத்து உங்களுக்கு சொல்லப்பட்ட பலன்கள் நடக்கும் அளவை அறிந்து கொள்ளுங்கள். அவற்றை அன்பர்கள் புரிந்துகொள்ள வேண்டி அதன் தோராயமான அளவை மதிபெண்ணில் தரபட்டுள்ளது. நன்மை தரும் கிரகங்களின் தசாபுத்தியோடு பொருந்திவந்தால் பலன்கள் உங்களுக்கு தித்திப்பை தரும். தீமை தரும் கிரகங்களின் தசாபுத்தியோடு பொருந்திவந்தால் பலன்கள் உங்களுக்கு கசப்பை தரும்.

நன்மைகளின் அளவை அதிகரிப்பதற்கும், தீமைகளின் அளவை குறைக்கவும் செய்ய வேண்டிய வழிப்பாட்டு முறைகளை அறிந்து கொள்ளவும் பின்வரும் வீடியோவை கிளிக் செய்யவும்.

விருச்சிகம் ராசி விகாரி தமிழ் புத்தாண்டு பலன்கள் விருச்சிகம் 2019-2020

[wp_ad_camp_3]

மேலும் ஜோதிடம் குறித்த குறிப்புகள் மற்றும் நுணுக்கமாக விசயங்கள் அறிந்துகொள்ள எமது YouTube சேனலான SHRI JAI SAKTHI JOTHIDAM – ஐ Subscribe செய்வதுடன் அருகில் வரும் Bell – ஐயும் Click செய்து கொள்ளுங்கள்.

https://www.youtube.com/c/SHRIJAISAKTHIJOTHIDAM

 மேலும் சுய ஜாதக சந்தேகங்களுக்கு (கட்டண சேவை)

ஸ்ரீ ஜெய் சக்தி ஜோதிடம், திருச்சி,

(ஜோதிட ஆராய்ச்சி நிலையம்)

எளிய பரிகார ஜோதிடர், ஜோதிட ஆச்சார்யா, பிரசன்ன ரத்னா

M.M.CHANDRA SEGARAN,

(M.M.சந்திர சேகரன்)

ஆலோசனை கட்டணம் குறித்த விபரமறிய உங்களின் ஜாதகத்தை

70102-92553 அல்லது 89730-66642 என்ற எண்ணிற்க்கு வாட்சப் அனுப்பவும்

*********************************

எம்மை வழிநடத்தும் இறைகுருவுக்கும், எம்முடைய ஜோதிட ஆசான்

குருஜி உயர்திரு ஜி.கே. அய்யா (திருப்பூர்) அவர்களுக்கும், எமது மானசீககுரு

உயர்திரு ஆதித்யகுருஜி (சென்னை) அவர்களுக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்

*********************************