கன்னி ராசிக்கான குருப்பெயர்ச்சி பலன்கள் 2018 – 2019

0
1053
Kanni, kanni rasi, kanni, mesah rasi, kanni rasi guru peurchi, kanni guru peyarchi, kanni rasi guru peyarchi, kanni rasi guru peyarchi palangal, kanni rasi guru peyarchi palangal,கன்னி, கன்னி ராசி, கன்னி ராசி, கன்னி ராசி குருப்பெயர்ச்சி, கன்னி ராசி குருப்பெயர்ச்சி பலன்கள்,கன்னி ராசி குருப்பெயர்ச்சி, கன்னி ராசி குருப்பெயர்ச்சி பலன்கள், கன்னி ராசி குருப்பெயர்ச்சி வழிபாடு, கன்னி ராசி குருப்பெயர்ச்சி வழிபாடு, kanni rasi guru peyarchi 2018 in tamil , Virgo horoscope 2018, Virgo, Virgo guru peyarchi 2018, கன்னி ராசி குருப்பெயர்ச்சி பலன்கள் 2018, கன்னி ராசி குருப்பெயர்ச்சி பலன்கள் 2018, guru peyarchi 2018 , guru peyarchi 2018 to 2019 predictions , guru peyarchi 2018 to 2019 in tamil , guru peyarchi 2018 to 2019 date , guru peyarchi 2018 to 2019 date in tamil , guru peyarchi 2018 to 2019 predictions in tamil , guru peyarchi palangal 2018 to 2019 in tamil , guru peyarchi 2018 to 2019 in tamil, குருப்பெயர்ச்சி பலன்கள், குருப்பெயர்ச்சி பலன்கள் 2018, http://www.dosomethingnew.in/,

குருப்பெயர்ச்சி 2018 2019

கன்னி

கன்னி ராசிக்கான குருப்பெயர்ச்சி பலன்கள்

பலன்கள் யாருக்கு நடக்கும்

பலன்கள் யாருக்கு நடக்காது

குருப்பெயர்ச்சி பலன்கள்

             கன்னி ராசிக்கு இதுவரை இரண்டாம் இடத்திலிருந்த குருபகவான் தற்போது மூன்றாமிடத்திற்கு மாறுகிறார். உங்கள் வாழ்க்கைக்கு தேவையான அடிப்படை அத்தியாவசிய மாற்றங்கள் நடைபெறும் காலமாக இது இருக்கும்.

குரு நிற்க போவது                        – மூன்றாமிடத்தில்        –     (விருச்சிகம்)

குருவின் ஐந்தாம் பார்வை           – ஏழாமிடம்                    –     (மீனம்)

குருவின் ஏழாம் பார்வை             – ஒன்பதாமிடம்             –     (ரிசபம்)

குருவின் ஒன்பதாம் பார்வை      – பதினோராமிடம்          –     (கடகம்)

பொதுவாக மூன்றாம் இடத்திற்கு குரு பெயர்ச்சியாவது நல்லநிலை அல்ல என்று நமது கிரந்தங்கள் கூறினாலும் குருபகவான் தனது சுபப் பார்வைகளால் கணவன் அல்லது மனைவி ஸ்தானமான ஏழாமிடத்தையும், பாக்கிய ஸ்தானமான ஒன்பதாமிடத்தையும் லாபங்கள் தரும் இடமான பதினொன்றாமிடத்தையும் பார்வையிடுவார் என்பதால் மேற்கண்ட இனங்கள் மூலமாக இப்போது நல்ல பலன்கள் உங்களுக்கு நடைபெறும்.

இந்தக் குருப்பெயர்ச்சியின் மூலமாக உங்களுக்கு நல்ல பணவரவும், வருமானங்களும் இருக்கும், பணத்தை எப்பொழுதும் பார்த்துக் கொண்டு இருந்தாலே பாதிப் பிரச்னைகள் தீர்ந்து விடும் என்று சொல்லுவது இந்த முறை உங்களுக்கு பொருத்தமாக இருக்கும். செய்கின்ற தொழில் வேலை, வியாபாரம் போன்ற ஜீவன அமைப்புகள் அனைத்தும் அதன் உச்சபட்ச லாப நிலையில் நடக்கும் என்பதால் தொழில் அமைப்புகளில் முன்னேற்றத்தைப் பற்றிய கவலை உங்களுக்கு இனி இருக்கப் போவது இல்லை.

வேலையில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டவர்கள் மீண்டும் பணியில் சேருவார்கள். வேலையை விட்டு விடலாமா என்று யோசனையில் இருந்தவர்களுக்கு சூழ்நிலைகள் நல்ல விதமாக அமைந்து வேலையை விட வேண்டிய நிலை நீங்கும். தற்காலிகப் பணியாளர்களுக்கு வேலை நிரந்தரமாகும்.

வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு அவர்கள் தகுதிக்கும் திறமைக்கும் ஏற்றபடி நல்ல சம்பளத்தில் வேலை கிடைக்கும். அலுவலகங்களில் ஏதோ ஒரு சின்ன பிரச்னையால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பதவி உயர்வும், சம்பள உயர்வும் இனிமேல் கிடைக்கும்.

அரசு ஊழியர்களுக்கு மேலதிகாரிகளால் இருந்து வந்த மன உளைச்சல்களும் வேலைப் பளுவும் நீங்கி உங்களை புரிந்து கொள்ளாமல் உங்களிடம் ‘கடுகடு’ வென இருந்த மேலதிகாரி மாறுதல் பெற்று அந்த இடத்திற்கு உங்களுக்கு அனுசரணையானவர் வருவார்.

இதுவரை சிக்கலில் இருந்த தொழில், வியாபாரம் போன்ற அமைப்புகள் மீண்டும் எழுச்சியுடன் நடைபெறப் போகும் காலம் வந்து விட்டதால் வியாபாரிகளுக்கும், தொழில் அதிபர்களுக்கும், சுய தொழில் செய்பவர்களுக்கும் இந்த குருப்பெயர்ச்சி மிகவும் கை கொடுக்கும் என்பதில் சந்தேகமே இல்லை.

இளைய பருவத்தினர் ஏமாற்றத்திலும் மன அழுத்தத்திலும் இருந்து விடுபடுவார்கள். இளைய தலைமுறைக்கு இந்த குருப் பெயர்ச்சி யோகத்தை தரப் போவதோடு இதுவரை இருந்து வந்த மனக் குழப்பங்களையும் காரியத் தடைகளையும் துரதிர்ஷ்டங்களையும் விரட்டி அடிக்கும் விதமாகவும் அமையப் போகிறது.

 குருப்பெயர்ச்சி நிகழும் நாள்

  • வாக்கியப்படி, புரட்டாசி மாதம் 18-ம் தேதி, (04.10.2018 – வியாழன்)
  • திருக்கணிதப்படி, புரட்டாசி மாதம் 25-ம் தேதி, (11.10.2018 – வியாழன்)

குருவின் சுப பார்வையானது, கன்னி ராசியினருக்கு எட்டு, பத்து மற்றும் பனிரெண்டு ஆகிய இடங்களில் விழுகிறது. இதனால் மேற்கண்ட பாவங்களின் அமைப்புகளில் உங்களுக்கு நல்ல பலன்கள் நடக்கும்.

குருவின் ஏழாமிடப் பார்வையால் குடும்பத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் தீரும். பிரிந்து வாழும் தம்பதியர் சேரக் கூடிய சூழல்கள் உருவாகும். தொழிலில் பங்குதாரர்களிடம் இருந்து வந்த சண்டை சச்சரவுகள் விலகி ஒருவருக்கொருவர் உதவிகரமாக இருப்பார்கள். பிரிந்த நண்பர்கள் ஒன்று சேருவார்கள்.

வேலை விஷயமாக வேறு வேறு ஊர்களில் பிரிந்து வேலை செய்யும் கணவன் மனைவிக்கு இந்தக் குருப் பெயர்ச்சியால் ஒரே ஊருக்கு டிரான்ஸ்பர் கிடைக்கும். வார இறுதி நாட்களில் மட்டும் குடும்பத்தோடு இருந்த நிலை மாறி குடும்பம் ஒன்று சேரும்.

திருமணமாகாத இளைய பருவத்தினத்தினருக்கு திருமணம் நடக்கும். கன்னி ராசிக்காரர்கள் வீட்டில் இந்த குருப் பெயர்ச்சியால் ஏதேனும் ஒரு சுப காரியம் உண்டு. குழந்தை இல்லாத தம்பதிகளுக்கு குழந்தை பாக்கியத்தை அருளுவார். ஆண் குழந்தைக்கு ஏங்கும் தம்பதிகளுக்கு ஆண் வாரிசு கிடைக்கும்.

முதல் திருமணத்தில் தடுக்கி விழுந்து, வாழ்க்கை கோணலாகி, துன்பத்தில் இருப்பவர்களுக்கு குரு இரண்டாவது வாழ்க்கையை நல்லவிதமாக அமைத்து தருவார். இந்த வாழ்க்கை நிலையாகவும் நீடித்தும் மனதிற்கு பிடித்த வகையிலும் இருக்கும். சில கன்னி ராசிக்காரர்கள் எதிர்கால வாழ்க்கைத் துணையை இப்போது சந்திப்பீர்கள். காதல் வரும் நேரம் இது. சிலருக்கு மனம் விரும்பிய வாழ்க்கை கிடைக்கும். காதலர்களுக்கு பெற்றோர்களின் சம்மதம் கிடைக்கும்.

குருபகவானின் ஒன்பதாமிடப் பார்வையால் தந்தை வழி உறவினர்களிடம் நெருக்கம் உண்டாகும். இதுவரை இருந்து வந்த பங்காளிப் பிரச்னை தீரும். பூர்வீக சொத்துக்களில் உங்கள் பாகம் சேதமில்லாமல் உங்களுக்கு கிடைக்கும். பெரியப்பா சித்தப்பாக்கள் மற்றும் தந்தையுடன் பிறந்த அத்தைகளால் லாபம் இருக்கும்.

குறிப்பிட்ட சிலருக்கு ஆலயப் பணி செய்யும் பாக்கியம் கிடைக்கும். நீண்ட நாட்களாக போக முடியாமல் தள்ளிப் போயிருந்த தீர்த்த யாத்திரை இப்போது போக முடியும். காசி, கயா, பத்ரிநாத், கேதார்நாத் போன்ற வட மாநில புண்ணியத் தலங்களை தரிசிக்கும் வாய்ப்பு இப்போது கிடைக்கும். ஞானிகளின் தரிசனம் கிடைக்கும். மகாபெரியவரின் அதிஷ்டானம் போன்ற புனித இடங்களை வழிபடும் பாக்கியம் உண்டாகும்.

தள்ளிப் போயிருந்த நேர்த்திக் கடன்களை இப்போது நிறைவேற்ற முடியும். குடும்பத்துடன் குல தெய்வ வழிபாடு செய்வீர்கள். தந்தையிடமிருந்து ஏதேனும் ஆதாயம் இருக்கும். இளைஞர்களுக்கு நீங்கள் விரும்பிக் கேட்கும் ஒரு பொருளை உங்கள் அப்பா வாங்கித் தருவார்.

மேலும் சில முக்கிய பலன்கள்

மூத்த சகோதரர், சகோதரிகளின் உறவு மேம்படும். அவர்களால் உதவிகள் இருக்கும். அண்ணன், தம்பி, அக்கா, தங்கை உறவுகள் பலப்படும். வயதில் மூத்தவர்களுக்கு மங்களகரமான நிகழ்ச்சிகள் வீட்டில் நடைபெறும். இதுவரை திருமணம் தாமதமான அக்கா, அண்ணன் போன்றவர்களுக்கு நல்ல இடத்தில் திருமணமாகும். அதிகம் பெண்களுடன் பிறந்தவர்கள் தங்கள் சகோதரிகளின் வீட்டு சுப காரியங்களுக்கு செலவு செய்ய வேண்டியிருக்கும்.

கன்னி ராசிப் பெண்களுக்கு இந்தக் குருப்பெயர்ச்சி நல்ல பலன்களைத்தான் அதிகம் தரும். இதுவரை உங்களை புரிந்துக் கொள்ளாத கணவர் இனிமேல் உங்களை புரிந்து கொண்டு, உங்கள் மனம் போல் நடந்து கொள்ள ஆரம்பிப்பார். பிள்ளைகள் உங்களின் கஷ்டங்களைப் புரிந்து கொள்வார்கள். வேலை செய்யும் இடங்களில் மதிப்பும், மரியாதையும் கிடைக்கும். உங்களின் அந்தஸ்து உயரும். கூட்டுக் குடும்பத்தில் மருமகளின் பேச்சு மாமியாரால் ஏற்கப்படும்.

உடல்நலம் விஷயத்தில் கவனமாக இருங்கள். சிறு சிறு உடல் கோளாறுகள் வரலாம். நீடித்த குறைபாடுகளான சர்க்கரை, ரத்தஅழுத்தம் போன்றவைகளால் பாதிக்கப் பட்டவர்கள் அடிக்கடி பரிசோதனை செய்து கொள்வது நல்லது. சிறிய பிரச்னை என்றாலும் ஆரம்பத்திலேயே மருத்துவரிடம் செல்லுங்கள்.

வெளிநாட்டு விஷயங்கள் நல்ல பலன் அளிக்கும் என்பதால் இப்போது வெளிநாட்டு வேலைக்கோ அல்லது வெளி தேசத்தில் மேற்படிப்பு படிக்கவோ செல்ல முடியும். அதனால் நன்மைகளும் இருக்கும்.

பிள்ளைகள் உங்கள் பேச்சைக் கேட்கவில்லை என்றால் கோபப்பட வேண்டம். நொந்து கொள்ள வேண்டம். இது உங்கள் தகப்பனாரிடம் நீங்கள் கட்டுப் பெட்டியாக வாழ்ந்த காலம் போல இல்லை. இது இளைஞர்களின் காலம். செல்போன் யுகம். நீங்கள் பிறந்த போது தொலைபேசி, டிவி, வீடியோ, இன்டர்நெட் என்று எதுவுமே கிடையாது. ஆனால் இப்போது உங்களின் குழந்தைகள் பிறக்கும் போதே கர்ணனின் கவச குண்டலம் போல அவற்றோடுதான் இருக்கிறார்கள் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்.

பொதுவாக கன்னி ராசிக்கு இது எதிர்கால முன்னேற்றத்திற்கு அடித்தளம் போடும் காலகட்டமாக அமையும். இப்போது ஏற்படும் அனுபவங்களால் உங்கள் எதிர்காலத்தை சிறப்பாக அமைத்துக் கொள்வீர்கள் என்பதால் இந்தக் குருப்பெயர்ச்சியில் கவலைப்படுவதற்கு ஒன்றும் இல்லை.

யாருக்கு பலன்கள் நடக்கும்?

      இது மேலே சொல்லப்பட்ட பலன்கள் யாவும், கன்னி ராசியில் பிறந்த அனைவருக்கு நடக்குமா என்ற கேள்வி வந்தால், பதில் இல்லை என்பதே. இதற்கு மூலகாரணமாக அவரவர்களின் சுய ஜாதகத்தில் நடக்கும் தசாபுத்தி பொறுத்தே பலன்கள் நடக்கும் என்பதே. இதில் ஒரு கூடுதல் காரணமாக இன்னொரு விசயத்தையும் சொல்லலாம்.

கன்னி ராசியில் பிறந்த அன்பர்களின், ஜாதகத்தில், பின்வரும் விதிகளை பொருத்தி பாருங்கள். அவை முழுதும் பொருந்தும் பொது உங்களுக்கு சொல்லப்பட்ட பலன்கள் நிச்சயம் நடக்கும். இல்லையேல் பலன்கள் நடக்கும்படி வந்து கை நழுவி போகும். அதாவது கைக்கு கிடைப்பது வாய்க்கு கிடைக்காமல் போகும்.

பலன்கள் நடக்க தேவையான அமைப்பு

(அவரவர் சுய ஜாதகத்தில்)

பலன்கள் நடக்கும் விதமும் தன்மையும்

  • சுய ஜாதக லக்ன சுபர்கள் இருப்பின், நன்மை துரிதமாக அதிகமாக நடக்கும், மிகவும் திருப்தி அடைவீர்கள்
  • சுய ஜாதக லக்ன அசுபர்கள் இருப்பின், நன்மையானது தடை, தாமதித்திற்கு பின் நடக்கும். திருப்தி அடையமாட்டீர்கள்
  • சுய ஜாதக லக்ன சமர்கள் (சம கிரகங்கள்) இருப்பின், நன்மையானது சரியான நேரத்தில், சரியான அளவில் கிடைக்கும். திருப்தியும் அடைவீர்கள்

Kanni, kanni rasi, kanni, mesah rasi, kanni rasi guru peurchi, kanni guru peyarchi, kanni rasi guru peyarchi, kanni rasi guru peyarchi palangal, kanni rasi guru peyarchi palangal,கன்னி, கன்னி ராசி, கன்னி ராசி, கன்னி ராசி குருப்பெயர்ச்சி, கன்னி ராசி குருப்பெயர்ச்சி பலன்கள்,கன்னி ராசி குருப்பெயர்ச்சி, கன்னி ராசி குருப்பெயர்ச்சி பலன்கள், கன்னி ராசி குருப்பெயர்ச்சி வழிபாடு, கன்னி ராசி குருப்பெயர்ச்சி வழிபாடு, kanni rasi guru peyarchi 2018 in tamil , Virgo horoscope 2018, Virgo, Virgo guru peyarchi 2018, கன்னி ராசி குருப்பெயர்ச்சி பலன்கள் 2018, கன்னி ராசி குருப்பெயர்ச்சி பலன்கள் 2018, guru peyarchi 2018 , guru peyarchi 2018 to 2019 predictions , guru peyarchi 2018 to 2019 in tamil , guru peyarchi 2018 to 2019 date , guru peyarchi 2018 to 2019 date in tamil , guru peyarchi 2018 to 2019 predictions in tamil , guru peyarchi palangal 2018 to 2019 in tamil , guru peyarchi 2018 to 2019 in tamil, குருப்பெயர்ச்சி பலன்கள், குருப்பெயர்ச்சி பலன்கள் 2018, http://www.dosomethingnew.in/,

  • விருச்சிகத்தில் இருக்கும் கிரகங்களுடன் குரு இணையும்போது கிடைக்கும் பலன் ஒரு நட்புணர்வு தன்மையானது இருக்கும்.(நட்புக்காக ஒரு விஷயம் செய்வது போல)
  • மீனத்தில் இருக்கும் கிரகங்களுடன் குரு இணையும்போது கிடைக்கும் பலனில் ஒரு ஆட்சி தன்மையானது இருக்கும்.(சுய விருப்பத்துடன், யாருக்காகவும் அல்லாமல், மனதார ஒரு விஷயம் செய்வது போல)
  • ரிஷபத்தில் இருக்கும் கிரகங்களுடன் குரு இணையும்போது கிடைக்கும் பலனில் ஒரு பகை தன்மையானது இருக்கும்.(பிடிக்காத நிலையில், வேறு வழியின்றி, ஒரு விஷயம் செய்வது போல)
  • கடகத்தில் இருக்கும் கிரகங்களுடன் குரு இணையும்போது கிடைக்கும் பலன் ஒரு நட்புணர்வு தன்மையானது இருக்கும்.(நட்புக்காக ஒரு விஷயம் செய்வது போல)
  • உங்களுக்கு அல்லது உங்கள் வீட்டில் இருக்கும் யாருக்காவது, குரு மகாதிசையோ, குரு புத்தியோ நடந்தால், பலன்கள் இரட்டிப்பு ஆகும்.

யாருக்கு பலன்கள் நடக்காது?

  • உங்கள் சுய ஜாதகத்தில் விருச்சிகம், மீனம், ரிஷபம், கடகம் ஆகிய இடங்களில் எந்த கிரகமும் இல்லாத போது இந்த குருபெயர்ச்சி உங்களுக்கு பெரிதாய் ஒன்றும் நன்மைகளையோ, தீமைகளையோ செய்யபோவதில்லை என்பதினை மனதில் நன்கு பதிய வையுங்கள்.

இறைவழிபாடு

உங்கள் சுய ஜாதகத்தில் குரு இருக்கும் நிலை பொறுத்து இறைவழிபாடு செய்யும்போது குருவின் பரிபூரண அருள் உங்களுக்கு கிடைக்கும்.

மேஷம் அல்லது விருச்சிகத்தில் குரு     –     செவ்வாய்க்கிழமை

ரிஷபம் அல்லது துலாமில் குரு              –     வெள்ளிக்கிழமை

மிதுனம் அல்லது கன்னியில் குரு          –     புதன்கிழமை

கடகத்தில் குரு                                        –     திங்கட்கிழமை

சிம்மத்தில் குரு                                       –     ஞாயிற்றுக்கிழமை

தனுசு அல்லது மீனத்தில் குரு               –     வியாழக்கிழமை

மகரம் அல்லது கும்பத்தில் குரு            –     சனிக்கிழமை

 வழிப்பாட்டு ஸ்தலங்கள்   

  • திருச்செந்தூர் முருகன் கோயில்
  • ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் கோயில்

சொல்லப்பட்ட இரண்டு கோயில்களில் ஏதேனும் ஒரு கோயிலுக்கு குருபெயர்ச்சிக்கு முன்னரோ, பின்னரோ இரண்டு மாதங்களுக்குள், உங்கள் சுய ஜாதகத்தில் குரு எங்கு உள்ளார் என்பதை முதலில் தெரிந்து, அதற்கு ஏற்ற கிழமைகளில், அன்றைய நாளின் சூரிய உதய நேரத்தில் இருந்து ஏழு மணிநேரம் வரையிலும் கோயிலுக்குள் இருந்து இறைவழிபாடு செய்ய, குருவின் பரிபூரண அருள் உங்களுக்கு கிடைக்கும்.

Kanni, kanni rasi, kanni, mesah rasi, kanni rasi guru peurchi, kanni guru peyarchi, kanni rasi guru peyarchi, kanni rasi guru peyarchi palangal, kanni rasi guru peyarchi palangal,கன்னி, கன்னி ராசி, கன்னி ராசி, கன்னி ராசி குருப்பெயர்ச்சி, கன்னி ராசி குருப்பெயர்ச்சி பலன்கள்,கன்னி ராசி குருப்பெயர்ச்சி, கன்னி ராசி குருப்பெயர்ச்சி பலன்கள், கன்னி ராசி குருப்பெயர்ச்சி வழிபாடு, கன்னி ராசி குருப்பெயர்ச்சி வழிபாடு, kanni rasi guru peyarchi 2018 in tamil , Virgo horoscope 2018, Virgo, Virgo guru peyarchi 2018, கன்னி ராசி குருப்பெயர்ச்சி பலன்கள் 2018, கன்னி ராசி குருப்பெயர்ச்சி பலன்கள் 2018, guru peyarchi 2018 , guru peyarchi 2018 to 2019 predictions , guru peyarchi 2018 to 2019 in tamil , guru peyarchi 2018 to 2019 date , guru peyarchi 2018 to 2019 date in tamil , guru peyarchi 2018 to 2019 predictions in tamil , guru peyarchi palangal 2018 to 2019 in tamil , guru peyarchi 2018 to 2019 in tamil, குருப்பெயர்ச்சி பலன்கள், குருப்பெயர்ச்சி பலன்கள் 2018, http://www.dosomethingnew.in/,

குறிப்பிட்ட ஸ்தலங்களுக்கு செல்ல முடியாதவர்கள் அருகில் இருக்கும் சிவன் கோயில்களில், உங்கள் சுய ஜாதகத்தில் குரு எங்கு உள்ளார் என்பதை முதலில் தெரிந்து, அதற்கு ஏற்ற கிழமைகளில், குருபெயர்ச்சிக்கு முன்னரோ, பின்னரோ இரண்டு மாதங்களுக்குள், தொடர்ந்து மூன்று வாரம், நவகிரக குருவுக்கு,  மஞ்சள் நிற இனிப்பான லட்டு நைவேத்தியம் செய்து, நெய் தீபம் ஏற்றி வர குருவின் பரிபூரண அருள் உங்களுக்கு கிடைக்கும். (இங்கு ஏழு மணிநேரம் கோவிலுக்குள்ளேயே இருக்க வேண்டிய அவசியமில்லை)

*********************************

கன்னி ராசி -க்கான குருபெயர்ச்சி பலன்கள் வீடியோ

மேலும் ஜோதிடம் குறித்த குறிப்புகள் மற்றும் நுணுக்கமாக விசயங்கள் அறிந்துகொள்ள எமது YouTube சேனலான SHRI JAI SAKTHI JOTHIDAM – ஐ Subscribe செய்வதுடன் அருகில் வரும் Bell – ஐயும் Click செய்து கொள்ளுங்கள்.

https://www.youtube.com/c/SHRIJAISAKTHIJOTHIDAM

மேலும் குரு பெயர்ச்சி மற்றும் சுய ஜாதக சந்தேகங்களுக்கு (கட்டண சேவை)

ஸ்ரீ ஜெய் சக்தி ஜோதிடம், திருச்சி

(ஜோதிட ஆராய்ச்சி நிலையம்)

எளிய பரிகார ஜோதிடர்

ஜோதிட ஆச்சார்யா

பிரசன்ன ரத்னா

M.M.CHANDRA SEGARAN

(M.M.சந்திர சேகரன்)

89730-66642, 70102-92553 

(இரண்டு எண்களும் வாட்சப்பில் உள்ளன)

*********************************

எம்மை வழிநடத்தும் இறைகுருவுக்கும், எம்முடைய ஜோதிட ஆசான்

குருஜி  உயர்திரு ஜி.கே. அய்யா அவர்களுக்கும், எமது மானசீககுரு

உயர்திரு ஆதித்யகுருஜி  அவர்களுக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.

*********************************

இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் உங்கள் நட்புகளும் உறவுகளும் பயன்பெற கீழே உள்ள சமூக வலைதளங்களில் ஷேர் செய்யுங்கள். நன்றி.