cibil score check free in cibil official website

0
3511

Contents

CIBIL SCORE

CIBIL SCORE என்றால் என்ன? (Credit Information Bureau India Limited) கடன் தகவல் நிறுவனம். பெரும்பாலும் லோன், கிரெடிட்கார்டு, EMI போன்றவைகளை பெற முயற்சித்துக்கொண்டு இருப்பவர்களுக்கு, முதலில் அவர்கள் காதில் விழும் வார்த்தை CIBIL SCORE. இந்தியாவில் இந்நிறுவனம் 2000-ஆம் துவங்கப்பட்டது. இந்நிறுவனத்தில் அனைத்து வங்கிகள்,கிரெடிட் கார்டு நிறுவனங்கள், அனைத்து வகையான கடன் வழங்கும் நிறுவனங்களும் உறுப்பினர்களாக இருந்து,தங்கள் நிறுவனத்தில் கடன் வாங்கிய வாடிக்கையாளர்களின் பரிவர்த்தனைகள், கடன் செலுத்தும் விதம் போன்றவற்றை CIBIL அமைப்பிடம் மாதாமாதம் பதிவு செய்வார்கள். அதை வைத்து இந்த CIBIL அமைப்பு வாடிக்கையாளர்களின் கடன் செலுத்தும் முறையை கண்காணித்து, அவர்களுக்கு 300 லிருந்து  900 வரை மதிப்பெண் கொடுத்து, அவர்களின் கடன் வாங்கி, திரும்ப செலுத்தும் மதிப்பை தீர்மானிக்கிறார்கள். அதுவே இந்த சிபில் ஸ்கோர் ஆகும்.

CIBIL SCORE குறைந்தால்?

சிபில் மதிப்பெண் ஒரு தனி நபருக்கோ அல்லது நிறுவனத்துக்கோ குறைந்தால் அவர்கள் கடன் வாங்கி திரும்ப செலுத்த முடியாதவர்களாக கருதப்படுவார்கள். CIBIL SCORE 300 லிருந்து 400-க்குள் இருந்தால் ஒருவருக்கு லோன், கிரெடிட் கார்டு போன்றைவைகள் கிடைக்காது. 700 -க்கும் மேல் இருந்தால் கண்டிப்பாக உங்களுடைய வருமானத்திற்கு தகுந்தாற்போல் லோன் கிடைக்கும்.

CIBIL SCORE ஏன் குறைகிறது?

ஒருவர் CIBIL அமைப்பில் உள்ள ஒரு நிறுவனத்திலிருந்து கடன் பெற்று அதை முறையாக திரும்ப செலுத்தாமல் இருப்பது, காசோலை பணம் இல்லாமலோ அல்லது வேறு இந்த காரணத்திற்காகவோ திரும்புவது (CHEQUE BOUNCE) போன்ற காரணங்களினால் CIBIL SCORE குறையும். அதிகமாக கடன் பெற்றுக்கொண்டே இருப்பது, அதிக கடன்களுக்கு விண்ணப்பித்து நிராகரிக்கப்படுவது ஆகிய காரணகளாலும் குறையும். எனவே மேற்கண்ட தவறுகள் ஏற்படாதவாறு பார்த்துக்கொள்ளுங்கள்.

நமது CIBIL SCORE தெரிந்து கொள்வது எப்படி?

சிபில் ஸ்கோரை பார்க்க நிறைய இடங்களில் அதிக பணம் வசூலிக்கிறார்கள். ஆனால் நிறைய இணையதளங்களில் இலவசமாகவும் நம்முடைய ஸ்கோரை தெரிந்துகொள்ள முடியும். நாம் இந்த பதிவில் சிபில் வெப்சைட்டிலேயே நமது ஸ்கோரை இலவசமாக தெரிந்து கொள்வது எப்படி என்று பார்க்கலாம்.

STEP 1

இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள். சிபில் ஸ்கோர் பார்க்க அதற்கடுத்து வரும் இந்த பக்கத்தில் உங்கள் விவரங்களை டைப் செய்து உங்களுக்கென்று USER ID, PASSWORD உருவாக்கி கொள்ளுங்கள். மொபைல் எண், இ மெயில் விவரங்கள் கண்டிப்பாக கொடுத்து CONTINUE TO STEP 2 -ஐ கிளிக் செய்யுங்கள்.

how to check cibil score free in cibil website.sibil score check free. cibil score. how to get cibile core free. free cibil score.

 

STEP 2

அடுத்த பக்கதில் உங்கள் பிறந்த தேதி, பாலினம், முகவரி, அடையாள அட்டை எண் ஆகியவற்றை டைப் செய்து I ACCEPT AND CONTINUE TO STEP 3- ஐ தேர்ந்தெடுங்கள்.

how to check cibil score free in cibil website.sibil score check free. cibil score. how to get cibile core free. free cibil score.

 

STEP 3

இந்த பக்கத்தில் நீங்கள் கொடுத்த மொபைல் எண் மற்றும் இ மெயில் -க்கு வரும் OTP எண்ணை டைப் செய்து CONTINUE கொடுக்கவும்.

how to check cibil score free in cibil website.sibil score check free. cibil score. how to get cibile core free. free cibil score.

 

இப்பொழுது உங்கல் சிபில் ஸ்கோர் உள்ள பக்கம் வரும்.

how to check cibil score free in cibil website.sibil score check free. cibil score. how to get cibile core free. free cibil score.

 

முக்கிய குறிப்பு

சிபில் ஸ்கோர் பார்ப்பதை அடிக்கடி செய்யாதீர்கள். குறைத்து மூன்று மாதத்திற்கு ஒருமுறை பார்த்து கொள்ளுங்கள்.

அனைவரும் பயன்பெற இந்த பதிவை கீழே உள்ள சமூக வலைதளங்களில் மறக்காமல் ஷேர் செய்யுங்கள். நன்றி.