சிம்மம் ராசி விகாரி தமிழ் புத்தாண்டு பலன்கள் 2019

0
1339
தமிழ் புத்தாண்டு பலன்கள், தமிழ் புத்தாண்டு பலன்கள் 2019, தமிழ் புத்தாண்டு பலன்கள் விகாரி வருடம், தமிழ் புத்தாண்டு பலன்கள் விகாரி வருடம் 2019, தமிழ் புத்தாண்டு பலன்கள் விகாரி வருடம் சிம்மம், தமிழ் புத்தாண்டு பலன்கள் விகாரி வருடம் சிம்மம் 2019, சிம்மம் ராசி விகாரி வருட பலன்கள், சிம்ம ராசி புத்தாண்டு பலன்கள், சிம்ம ராசி புத்தாண்டு பலன்கள் 2019, சிம்ம ராசி விகாரி வருட பலன்கள், விகாரி வருட சிம்ம ராசி பலன்கள், விகாரி வருட சிம்மம் ராசி பலன்கள், விகாரி வருட ராசி பலன்கள், விகாரி வருட புத்தாண்டு ராசி பலன்கள், tamil puthandu palankal, tamil varuda puthandu palangal, 2019 tamil puthandu palangal, vigari varuda rasi palangal, simmam rasi tamil puthandu palangal, simma rasi tamil puthandu palangal,

வித்தியாசமான  கோணத்தில் விகாரி வருட சிம்மம் ராசி பலன்கள்2019-2020

சுய ஜாதகப்படி நற்பலன்கள் அளவு மற்றும் கெடுபலன்கள் அளவு – உங்களுக்கு நீங்களே அறிந்துகொள்ளும் சூட்சமத்துடன்

சிம்மம் ராசி விகாரி தமிழ் புத்தாண்டு பலன்கள் பொதுவாக சொல்லப்படும் யாவும், அனைவருக்கும் நடக்குமா என்ற கேள்வி வந்தால், பதில் இல்லை என்பதே. சொல்லப்படும் பலன்கள் சுய ஜாதகத்தின் தசாபுத்தி பொருத்து மாறும் என்பது உண்மையே.

இருந்தாலும் இன்னொரு சூட்சமமும் உள்ளது. அந்த சூட்சமத்தையும் அதன்படி பலன்கள் நடக்கும் அளவை அறிந்து கொள்ள அன்பர்கள் புரிந்துகொள்ள வேண்டி பலன்களின் தோராயமான அளவை மதிபெண்ணில் தரபட்டுள்ளது.

முதலில் பலன்களையும் பின்பு யார்யாருக்கு எந்த அளவு பலன்கள் கிடைக்கும் என்பதனையும் பார்ப்போம்

தமிழ் புத்தாண்டு பலன்கள் 2019-2020

வருட பலன்களை நிர்ணயிக்க உதவும் குரு மற்றும் சனி போன்ற முக்கியமான     கிரகங்கள் அனைத்தும் பெயர்ச்சி காண போகும் இந்த விகாரி வருடத்தில், சர்ப்ப கிரகங்கள் என்று சொல்லபடும் ராகு-கேதுக்கள் முன்னமே பெயர்ச்சி கண்டுள்ள நிலையில் முக்கோண தரப்பில் பலன்கள் தர காத்துள்ளது இந்த தமிழ் புத்தாண்டான விகாரி தமிழ் புத்தாண்டு.

இதில், விகாரி பிறப்புக்கு சில வாரங்கள் முன்னமே மார்ச் மாதத்தில் பெயர்ச்சி கண்ட ராகு-கேதுக்கள், உங்கள் சிம்மம் ராசிக்கு முறையே பதினொன்று-ஐந்து என்று சொல்லபடும் லாப மற்றும் பூர்வ-புண்ணிய ஸ்தானங்களில் அமர்ந்துவிட்ட நிலையில், விகாரி ஆண்டு மத்தியில் நவம்பர் மாதத்தில் நடக்கும் பெயர்ச்சி மூலம் குரு, தனது ஆட்சி வீடான தனுசிலும் (பூர்வ புண்ணியாதிபதி ஆட்சி பலம் பெற்று ராசிக்கு ஐந்திலும்), அதற்கடுத்து வரும் ஜனவரி மாதத்தில் நடக்கும் பெயர்ச்சி மூலம் சனியும் தனது ஆட்சி வீடான மகரத்தில் (ஆட்சி பலம் பெற்று ராசிக்கு ஆறில்) அமரவுள்ளனர்.

சிம்ம ராசிக்கு வருடம் ஆரம்பத்தில் மந்தமான பலன்களும், பிரச்சனைகளும் தந்து வருட முடிவில் துரிதமான பலன்களும், பிரச்சனைகளுக்கு தீர்வும் கிடைக்கவிருக்கிறது.

உங்கள் சுய ஜாதகத்தில் அதிக வலிமை பெற்றுள்ள கிரகம் எது என கண்டறிந்து அதற்கான இறைவழிபாடு அல்லது இரத்தின கல் அணிவதன் மூலம், இந்த விகாரி வருடத்தின் பலன்களை உங்களுக்கு சாதகமாக்கி கொள்ளுங்கள்.

தொழில், வேலை, வியாபாரம் போன்றவைகளில் மாறுதலைக் கொடுக்கும் என்பதால் இதுவரை மேற்படி இனங்களில் இருந்து வந்த நிலைகள் மாறி புதுவிதமான அமைப்புகள் சிம்ம ராசிக்காரர்களுக்கு உருவாகும். அது நல்லதாக இருக்கும்.

வெளிநாடு சம்பந்தப்பட்ட அனைத்து விஷயங்களும் இப்போது வெற்றிகரமாக கை கொடுக்கும். மாணவர்கள் உயர்கல்வி கற்பதற்கு மேல் நாடுகளுக்கு செல்ல முடியும்.

வேலை

[wp_ad_camp_3]

வெளிநாட்டு வேலைக்கு விண்ணப்பித்திருந்தவர்களுக்கு வேலை கிடைக்கும். வயதானவர்களுக்கு வெளிநாட்டில் இருக்கும் பேரன், பேத்திகளை பார்ப்பதற்கு வாய்ப்பு கிடைக்கும்.

ஒரு சிலர் மகன், மகள்களுக்கு உதவி செய்ய வெளிநாட்டுப் பயணம் மேற்கொள்வீர்கள்.

அரசு வேலை பெற தேர்வு எழுதி வெற்றி பெற்ற பின்பும், வேலையில் சேர காத்திருக்கும் அன்பர்களுக்கு இந்த வருடம் தித்திப்பை தரவுள்ளது.

உங்களின் சுய ஜாதகத்தில் அரசு வேலை அமைத்து தரும் கிரகங்கள் சரியான இடத்தில் சுப வலிமை பெற்று அமர்ந்திருக்கும் பட்சத்தில், தகுந்த தசாபுத்தி அமைப்புகள் நடப்பில் இருக்குமேயானால் நிச்சயம் அரசு வேலையில் உங்களை அமர வைக்கும் வருடமாக இந்த விகாரி வருடம் இருக்கும்.

பாக்கெட்டில் எவ்வளவு பணம் இருந்தாலும் அதற்கு அதிகமாக செலவு இருப்பதால் வரவுக்கேற்ப செலவு செய்வது நல்லது. வீண்விரயங்கள் ஏற்படும் காலம் இது என்பதால் செலவு செய்யும் முன் நன்கு யோசனை செய்து செலவு செய்யுங்கள்.

ஆடம்பர செலவுகளை தவிருங்கள். செலவுகளை நான்கில் இருக்கும் குருபகவான் இழுத்து விடுவார் என்பதால் கையில் இருக்கும் சேமிப்பு பணத்தை நிலத்திலோ, வேறு வகையான விஷயத்திலோ முதலீடு செய்வது நல்லது.

ராகு விலகி, பதினொன்றில் இருக்கப்  போவது உங்களுக்கு மிகப்பெரிய திருப்பங்களையும் மாற்றங்களையும் தரும்.

அதுமுதல் உங்கள் உடல், மனம் இரண்டும் சீரடைவதையும், உங்களைப் பாதித்த பிரச்னைகள் விலகுவதையும் நீங்கள் உணர முடியும்.

ராகு,கேது பெயர்ச்சியினால் மிகுந்த உற்சாகமும் புத்துணர்ச்சியும் அடையப் பெறுவீர்கள். இதுவரை இருட்டுக்குள் நிற்பதைப் போல உணர்ந்தவர்களுக்கு ஒளியெனும் பாதை கண் முன்னே தெரியும்.

சுருக்கமாகச் சொல்லப்போனால் வேலை தொழில் விஷயங்களில் பின்னடைவுகள், பொருளாதாரச் சிக்கல்கள், கடன் தொல்லைகள், ஆரோக்கியக் குறைவு போன்றவை எதுவும் இந்த வருடம் சிம்மத்திற்கு இருக்காது என்பது உறுதி.

வருடம் முழுவதும் ராகுபகவான் மிகவும் நல்ல பலன்களை தரும் வலுவான பதினோராமிடத்தில் இருக்கிறார்.

அதேபோல கேதுவும் நன்மைகளைத் தரும் அமைப்பில் இருக்கிறார். இதன் மூலம் இந்த வருடத்தில் உங்களுடைய கடன், நோய், எதிர்ப்பு போன்ற அமைப்புகள் வலுவிழக்கின்றன. இதனால் இதுவரை இருந்து வந்த கடன் தொல்லைகள் நீங்கும்.

தொழில்

பத்தாமிடத்தைக் குரு பார்த்துகொண்டிருப்பதால் தொழில், வேலை, வியாபாரம் போன்ற ஜீவன அமைப்புகள் தடைகள் விலகி நல்லபடியாக நடக்க ஆரம்பிக்கும்.

சுயதொழில் செய்வோருக்கு புதிய ஆர்டர்கள் கிடைக்கும். மஞ்சள் நிறம் சம்பந்தப்பட்ட தொழில் செய்பவர்களுக்கு மேன்மையான பலன்கள் இருக்கும்.

தங்கநகை, நவதானியம், ஆன்மிகம் சம்பந்தப்பட்ட பொருட்களை விற்பனை செய்பவர்கள், கோவில்கள், வழிபாட்டுத் தலங்களை சுற்றி கடை வைத்திருப்பவர்களின் வாழ்க்கைத்தரம் உயரும்.

கடன்கள் கட்டுக்குள் இருக்கும். சிலர் புதிய கடன்களை வாங்கி பழைய கடன்களை அடைப்பீர்கள். சிலருக்கு அலைச்சல்களும் மந்த நிலையும் ஒருபுறம் இருந்தாலும் இன்னொருபுறம் தொழில் முன்னேற்றமும் வருமானமும் கண்டிப்பாக இருக்கும்.

செய்கின்ற தொழிலில் அதிக முயற்சி இல்லாமலேயே நிறைந்த லாபங்கள் இப்போது கிடைக்கும். கண்மூடிக் கண் திறப்பதற்குள் பாக்கெட்டில் எப்படி பணம் வந்தது என்று சொல்ல முடியாத அமைப்பில் பண வரவு தற்போது உங்களுக்கு இருக்கும்.

அலுவலங்களில் நல்ல பெயர் கிடைக்கும். இழந்த போன பெருமையை மீட்டெடுப்பீர்கள். நீண்ட நாட்களாக மனதில் உருப்போட்டு வந்திருந்த எண்ணங்கள் திட்டங்கள் கனவுகள் ஆகியவை நினைத்தபடியே நடக்கப்போகும் காலம் இது.

எனவே உங்களின் உடல்நிலையும் மனநிலையும் தெளிவாகவும் உற்சாகத்துடன் இருக்கும்.

நண்பர்கள், நலம் விரும்பிகள் மூலம் பொருளாதார உதவிகள் ஆதரவானபோக்கு மற்றும் அனுசரணையான பேச்சு இருக்கும். இதுவரை கோர்ட்கேஸ் போன்ற வழக்குகளில் சிக்கி அவதிப்பட்டவர்களுக்கு நல்ல திருப்புமுனையான நிகழ்ச்சிகள் நடந்து உங்கள் பக்கம் அனைத்தும் சாதகமாகும்.

தொழிலதிபர்களுக்கு இதுவரை இருந்து வந்த முட்டுக்கட்டைகள் விலகும். விவசாயிகள், கலைஞர்கள், பொதுவாழ்வில் இருப்பவர்கள், ஊடகம் மற்றும் பத்திரிகைத் துறையினர், தொழிலாளர்கள், அன்றாடம் சம்பளம் வாங்குபவர்கள் போன்ற எந்த துறையினர்களாக இருந்தாலும் இந்த நல்லநேரத்தைப் பயன்படுத்திக் கொண்டு நினைத்ததை சாதிக்கலாம்.

கணவன் மனைவி உறவில் இதுவரை இருந்து வந்த கருத்துவேற்றுமைகள் நீங்கும். மூன்றாவது மனிதரால் குடும்பத்தில் ஏற்பட்டிருந்த குழப்பங்கள் அடையாளம் காணப்பட்டு நீங்களே பிறர் உதவியின்றி குழப்பங்களைத் தீர்த்துக் கொள்வீர்கள்.

இதுவரை காணாமல் போயிருந்த உங்களின் மனதைரியம் இப்போது மீண்டும் வரும். எதையும் சமாளிப்பீர்கள். ஒரு சிலர் ஏதேனும் ஒரு செயலால் புகழ் அடைவீர்கள். சகோதர உறவு மேம்படும்.

இளைய சகோதரத்தால் நன்மை உண்டு. தம்பி தங்கையர்களுக்கு நல்லது செய்ய முடியும். மூத்த சகோதர சகோதரிகள் உதவுவார்கள்.

பெண்கள்

பெண்களுக்கு குடும்பத்தில் நற்பெயரும் கௌரவமும் கிடைக்கும். பெண்களின் ஆலோசனை குடும்பத்தில் ஏற்கப்படும். வேலைக்குச் செல்லும் மகளிருக்கு பதவிஉயர்வு கூடுதல்சம்பளம் போன்ற பலன்கள் இருக்கும்.

அதிகாரிகளால் பாராட்டப்படுவீர்கள். உடன் பணிபுரியும் ஆண்களின் ஒத்துழைப்பும் கிடைக்கும். பட்டுச்சேலை முதல் பாதக் கொலுசு வரை வாங்குவீர்கள். குடும்பத்திலும் அலுவலகத்திலும் கௌரவமாக நடத்தப்படுவீர்கள்.

நோய் இதுவென்று தெரியாமல் மருத்துவத்தாலும் கண்டுபிடிக்க இயலாமல் இருந்தவர்களுக்கு நோய் கட்டுப்பட்டு விரைவில் குணமடையும்.

சொத்து பிரச்சினை, பங்காளித்தகராறு, கணவன்-மனைவி விவாகரத்து பிரச்சினைகள் சம்பந்தமாக காவல்நிலையம், நீதிமன்றம் என அலைந்து கொண்டிருந்தவர்களுக்கு வழக்குகள் சாதகமாக முடிவிற்கு வந்து நிம்மதியைத் தரும்.

மொத்தத்தில் பிறக்கவிருக்கும் வருடம் முற்பகுதியில் உங்கள் பொறுமையை சோதித்து பிற்பகுதியில், அதற்கான பலனை தராமல் போகாது.

வருங்கால முன்னேற்றத்திற்கு அடித்தளம் போடும் காலகட்டமாக அமையும். இப்போது ஏற்படும் அனுபவங்களால் உங்கள் எதிர்காலத்தை சிறப்பாக அமைத்துக் கொள்வீர்கள். கசப்பான அனுபவங்கள் எதுவும் இல்லாமல் வாழ்க்கை சரியான பாதையில் போகும் என்பதால் கவலைகளுக்கு இடமில்லை.

சிம்மம் ராசி விகாரி தமிழ் புத்தாண்டு பலன்கள் யாருக்கு நடக்கும்? யாருக்கு நடக்காது?

நன்மைகள் எவ்வளவு? தீமைகள் எவ்வளவு?

மேலே சொன்ன பலன்கள் யாவும், சிம்மம் ராசியில் பிறந்த அனைவருக்கும் நடக்குமா என்ற கேள்வி வந்தால், பதில் இல்லை என்பதே.

இதற்கு மூலகாரணமாக அவரவர்களின் சுய ஜாதகத்தில் நடக்கும் தசாபுத்தி பொறுத்தே பலன்கள் நடக்கும் என்பது மட்டுமல்ல.

மற்றொரு கூடுதல் காரணமாக பின்வரும் லிங்க்-ல் சொல்லப்ட்டுள்ள விதிகளை பொருத்தி பாருங்கள். அவை பொருந்தும் விதம் பொருத்து உங்களுக்கு சொல்லப்பட்ட பலன்கள் நடக்கும் அளவை அறிந்து கொள்ளுங்கள்.

அவற்றை அன்பர்கள் புரிந்துகொள்ள வேண்டி அதன் தோராயமான அளவை மதிபெண்ணில் தரபட்டுள்ளது.

நன்மைகளின் அளவை அதிகரிப்பதற்கும், தீமைகளின் அளவை குறைக்கவும் செய்ய வேண்டிய வழிப்பாட்டு முறைகளை அறிந்து கொள்ளவும் பின்வரும் வீடியோவை கிளிக் செய்யவும்.

சிம்மம் ராசி விகாரி தமிழ் புத்தாண்டு பலன்கள் 2019-2020

[wp_ad_camp_3]

மேலும் ஜோதிடம் குறித்த குறிப்புகள் மற்றும் நுணுக்கமாக விசயங்கள் அறிந்துகொள்ள எமது YouTube சேனலான SHRI JAI SAKTHI JOTHIDAM – ஐ Subscribe செய்வதுடன் அருகில் வரும் Bell – ஐயும் Click செய்து கொள்ளுங்கள்.

https://www.youtube.com/c/SHRIJAISAKTHIJOTHIDAM

மேலும் சுய ஜாதக சந்தேகங்களுக்கு (கட்டண சேவை)

ஸ்ரீ ஜெய் சக்தி ஜோதிடம், திருச்சி,

(ஜோதிட ஆராய்ச்சி நிலையம்)

எளிய பரிகார ஜோதிடர், ஜோதிட ஆச்சார்யா, பிரசன்ன ரத்னா

M.M.CHANDRA SEGARAN,

(M.M.சந்திர சேகரன்)

ஆலோசனை கட்டணம் குறித்த விபரமறிய உங்களின் ஜாதகத்தை

70102-92553 அல்லது 89730-66642 என்ற எண்ணிற்க்கு வாட்சப் அனுப்பவும்

*********************************

எம்மை வழிநடத்தும் இறைகுருவுக்கும், எம்முடைய ஜோதிட ஆசான்

குருஜி உயர்திரு ஜி.கே. அய்யா (திருப்பூர்) அவர்களுக்கும், எமது மானசீககுரு

உயர்திரு ஆதித்யகுருஜி (சென்னை) அவர்களுக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்

*********************************