கடகம் ராசி விகாரி தமிழ் புத்தாண்டு பலன்கள் 2019

0
2827
தமிழ் புத்தாண்டு பலன்கள், தமிழ் புத்தாண்டு பலன்கள் 2019, தமிழ் புத்தாண்டு பலன்கள் விகாரி வருடம், தமிழ் புத்தாண்டு பலன்கள் விகாரி வருடம் 2019, தமிழ் புத்தாண்டு பலன்கள் விகாரி வருடம் கடகம், தமிழ் புத்தாண்டு பலன்கள் விகாரி வருடம் கடகம் 2019, கடகம் ராசி விகாரி வருட பலன்கள், கடக ராசி புத்தாண்டு பலன்கள், கடக ராசி புத்தாண்டு பலன்கள் 2019, கடக ராசி விகாரி வருட பலன்கள், விகாரி வருட கடக ராசி பலன்கள், விகாரி வருட கடகம் ராசி பலன்கள், விகாரி வருட ராசி பலன்கள், விகாரி வருட புத்தாண்டு ராசி பலன்கள், tamil puthandu palankal, tamil varuda puthandu palangal, 2019 tamil puthandu palangal, vigari varuda rasi palangal, kadagam rasi tamil puthandu palangal, kadaga rasi tamil puthandu palangal,

Contents

வித்தியாசமான  கோணத்தில் விகாரி வருட கடகம் ராசி பலன்கள் 2019-2020

சுய ஜாதகப்படி நற்பலன்கள் அளவு மற்றும் கெடுபலன்கள் அளவு – உங்களுக்கு நீங்களே அறிந்துகொள்ளும் சூட்சமத்துடன்

கடகம் ராசி விகாரி புத்தாண்டு பலன்கள் பொதுவாக சொல்லப்படும் யாவும், அனைவருக்கும் நடக்குமா என்ற கேள்வி வந்தால், பதில் இல்லை என்பதே. சொல்லப்படும் பலன்கள் சுய ஜாதகத்தின் தசாபுத்தி பொருத்து மாறும் என்பது உண்மையே.

இருந்தாலும் இன்னொரு சூட்சமமும் உள்ளது. அந்த சூட்சமத்தையும் அதன்படி பலன்கள் நடக்கும் அளவை அறிந்து கொள்ள அன்பர்கள் புரிந்துகொள்ள வேண்டி பலன்களின் தோராயமான அளவை மதிபெண்ணில் தரபட்டுள்ளது.

முதலில் பலன்களையும் பின்பு யார்யாருக்கு எந்த அளவு பலன்கள் கிடைக்கும் என்பதனையும் பார்ப்போம்

கடகம் ராசி விகாரி தமிழ் புத்தாண்டு பலன்கள் 2019-2020

வருட பலன்களை நிர்ணயிக்க உதவும் குரு மற்றும் சனி போன்ற முக்கியமான கிரகங்கள் அனைத்தும் பெயர்ச்சி காண போகும் இந்த விகாரி வருடத்தில், சர்ப்ப கிரகங்கள் என்று சொல்லபடும் ராகு-கேதுக்கள் முன்னமே பெயர்ச்சி கண்டுள்ள நிலையில் முக்கோண தரப்பில் பலன்கள் தர காத்துள்ளது இந்த தமிழ் புத்தாண்டான விகாரி தமிழ் புத்தாண்டு.

இதில், விகாரி பிறப்புக்கு சில வாரங்கள் முன்னமே மார்ச் மாதத்தில் பெயர்ச்சி கண்ட ராகு-கேதுக்கள், உங்கள் கடகம் ராசிக்கு முறையே பன்னிரண்டு-ஆறு என்று சொல்லபடும் வைத்திய மற்றும் ரண-ரோக ஸ்தானங்களில் அமர்ந்துவிட்ட நிலையில், விகாரி ஆண்டு மத்தியில் நவம்பர் மாதத்தில் நடக்கும் பெயர்ச்சி மூலம் குரு, தனது ஆட்சி வீடான தனுசிலும் (ஆட்சி பலம் பெற்று ராசிக்கு ஆறிலும்), அதற்கடுத்து வரும் ஜனவரி மாதத்தில் நடக்கும் பெயர்ச்சி மூலம் சனியும் தனது ஆட்சி வீடான மகரத்தில் (ஆட்சி பலம் பெற்று ராசிக்கு ஏழில்) அமரவுள்ளனர்.

கடக ராசிக்கு இந்த விகாரி வருடம் முழுவதும் அதிக நன்மைகளை அள்ளித்தர காத்திருக்கிறது, மனம், உடல், உயிர் அனைத்தும் தித்திப்பில் திகழபோகும் தித்திப்பான வருடம் இது.

தன்னம்பிக்கை மனதில் குடி கொள்ளும். கௌரவம், அந்தஸ்து கூடும்படியான சம்பவங்கள் நடக்கும். கையில் பணப் புழக்கம் அதிகரித்து குடும்பத்தில் உங்களுடைய சொல்லை அனைவரும் கேட்கும் நிலை உருவாகும்.

இதுவரை விடை தெரியாமல் தத்தளித்து கொண்டிருந்த விஷயங்களுக்கான பதில்களும் தீர்வுகளும் உங்கள் மனத்தில் நல்லவிதமாகத் தோன்றி உங்களின் அனைத்துப் பிரச்னைகளும் உங்களுக்கு சாதகமாக முடிய போகிறது.

வேலை

[wp_ad_camp_3]

வேலை செய்யும் இடத்தில் அதிருப்திகளும் சஞ்சலங்களும் விரக்தியும் இருக்காது. பதவி உயர்வு கிடைக்கும்.

நிலுவையில் இருந்த சம்பள உயர்வும் பாக்கித் தொகையும் பெறுவீர்கள். பதவி உயர்வுடன் கூடிய இடமாற்றங்கள் உண்டு.

உங்களுக்கு இருந்து வந்த மனக்கவலைகள் குழப்பங்கள், உடல்நலக் குறைவு, கடன் தொல்லை மற்றும் எதிர்மறை எண்ணங்கள், தொழில் தேக்கம், அதிர்ஷ்டக் குறைவு, தடைகள், தாமதங்கள் போன்ற அனைத்தும் இனித் தீர்ந்து மிகவும் மேன்மையான ஒரு காலம் ஆரம்பிக்கிறது.

திருமணமாகாத இளைய பருவத்தினருக்கு திருமண காலம் கூடி வந்து விட்டது. தடைகள் நீங்கி வரன்கள் கூடிவந்து திருமணம் நடக்கும். காதலித்துக் கொண்டிருந்தவர்களுக்கு பெற்றோர் சம்மதம் கிடைக்கும்.

ஒரு சிலர் புதிதாக காதலிக்க ஆரம்பித்து தங்களின் வாழ்க்கைத் துணைவரை அடையாளம் காண்பீர்கள்.

குடும்பம்

முதல் வாழ்க்கையில் சிக்கல்கள் தோன்றி கோர்ட், போலீஸ் என்று அலைந்து விவாகரத்து பெற்றவர்களுக்கு இரண்டாவது வாழ்க்கை நல்லபடியாக அமையும்.

குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு குழந்தை பிறக்கும். மகன் மகள் விஷயத்தில் இதுவரை இருந்து வந்த மனக்கவலைகள் இனிமேல் இருக்காது.

பிள்ளைகள் விஷயத்தில் நல்ல செய்திகள் கிடைக்கும். கூட்டுக் குடும்பத்தில் பெரியவர்கள் குடும்ப உறுப்பினர்கள் அனைவருக்கும் செய்ய வேண்டிய கடமைகளை நல்லவிதமாக செய்ய முடியும். வயதானவர்கள் தாத்தா பாட்டியாக பதவி உயர்வு பெறுவீர்கள். இளையவர்கள் பெற்றோர்களிடமிருந்து ஆதரவையும் ஆசீர்வாதங்களையும் பெற முடியும்.

ஆறாமிடத்தில் ஏற்கனவே சனி அமர்ந்துள்ள நிலையில், கேதுவும் வந்து அங்கு இணைந்த காரணத்தால் பாவ கிரகங்களான சனி, கேது இரண்டும் ஜோதிட விதிப்படி 3,6,11 ஆகிய இடங்களில் அமரும் காலங்களில் நிச்சயம் கெடுதல்கள் அதிகம் செய்யமாட்டார்கள்.

ஆனாலும், சனி கேது இணைவு நீங்கள் செய்துகொண்டிருக்கும் தொழில் மற்றும் பார்க்கும் வேலையில் சிறு சுணக்கம் தராமல் போகாது. மேலும், உங்கள் ஜாதகத்தில் சனி தசையோ, கேது தசையோ புத்தியோ, சனி தசை கேது புத்தி, அல்லது கேது தசை சனி புத்தி நடப்பில் இருந்தால் இதன் தாக்கம் சற்று அதிகமாகவே இருக்கும் எச்சரிக்கை.

மற்றவர்கள் நிச்சயம் இந்த பாவ கிரகங்களின் இணைவு 6ல் நடப்பதால் நிச்சயம் அதனால் யோகம் அடைவார்கள்.

அதேபோல குருபகவானும் ஐந்தாமிடத்தில் இருப்பதால் கடகத்தின் முன்னேற்றத்திற்கு தடைகள் எதுவும் இந்த வருடம் கோட்சார ரீதியாக இல்லை.

தொழில்

தொழிலதிபர்களுக்கு இதுவரை இருந்து வந்த முட்டுக்கட்டைகள் விலகும். அரசாங்க ஆதரவு உண்டு. இடைத்தரகர்களை நீக்கி நேரடியாக அமைச்சர்களையோ அதிகாரிகளையோ பார்த்து காரியங்களை வெற்றியாக்க முடியும்.

எந்த ஒரு காரியத்திலும் எடுக்கும் முயற்சிகள் இப்போது பலிதமாகும். தொழிலை விரிவுபடுத்தலாம். புதிய சோதனை முயற்சிகளை இப்போது செய்யலாம்.

அரசு வேலை பெற தேர்வு எழுதி வெற்றி பெற்ற பின்பும், வேலையில் சேர காத்திருக்கும் அன்பர்களுக்கு இந்த வருடம் தித்திப்பை தரவுள்ளது.

உங்களின் சுய ஜாதகத்தில் அரசு வேலை அமைத்து தரும் கிரகங்கள் சரியான இடத்தில் சுப வலிமை பெற்று அமர்ந்திருக்கும் பட்சத்தில், தகுந்த தசாபுத்தி அமைப்புகள் நடப்பில் இருக்குமேயானால் நிச்சயம் அரசு வேலையில் உங்களை அமர வைக்கும் வருடமாக இந்த விகாரி வருடம் இருக்கும்.

இதுவரை வெளிமாநில வேலைக்குச் செல்ல இருந்த தடைகள் விலகும். பிற, இன, மொழி மதக்காரர்கள் உங்களிடம் நேசமாக இருப்பார்கள்.

வெளி மாநிலத்தவர்கள் நண்பர்களாகக் கிடைப்பார்கள். அவர்களால் நன்மைகள் உண்டாகும்.  தூரத்தில் பணியிடம் அமையும். பயணங்களால் உற்சாகமாக இருப்பீர்கள். வருடத்தின் பிற்பகுதியில் மிகவும் நல்ல பலன்கள் உங்களுக்கு நடக்கும்.

இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் வருட முற்பகுதியில் மிகவும் யோகமான நிகழ்ச்சிகளை சந்திப்பீர்கள். எதிர்கால வாழ்க்கைக்கு அஸ்திவாரம் போடும் காலம் இது.

எதிர்காலத்தில்  நீங்கள் எந்தத் துறையில் இருக்கப் போகிறீர்கள் என்பதை இந்த வருடம் நிர்ணயிக்கும் என்பதால் மிகவும் பயனுள்ள வருடமாகும் இது.

இளைஞர்களின் மனம் சந்தோஷப்படும்படியான நிகழ்ச்சிகளும், பணவரவும், உங்களால் வீட்டிற்கு புதிதாக ஏதேனும் பொருள் சேர்க்கையும் இருக்கும்.

இதுவரை திருமணம் ஆகாதவர்களுக்கு கல்யாணம் உறுதியாகும். நல்லவேலை கிடைக்காமல் அவதிப்பட்டுக் கொண்டிருந்த இளைய பருவத்தினருக்கு நல்ல இடத்தில் வேலை கிடைத்து செட்டில் ஆவீர்கள்.

நீண்டநாட்களாக எதிர்பார்த்திருந்த ஒரு தொகை வரும். சிரமங்கள் அனைத்தும்  தீரும்.

வெளிநாட்டு விஷயங்கள் நல்லபலன் அளிக்கும் என்பதால் இப்போது வெளிநாட்டு வேலைக்கோ அல்லது வெளி தேசத்தில் மேற்படிப்பு படிக்கவோ செல்ல முடியும்.

அதிர்ஷ்ட பலன்கள்

அதனால் நன்மைகளும் இருக்கும். குறிப்பிட்ட சிலருக்கு இப்போது இருக்கும் வாகனத்தை விட நல்ல வாகனம் அமையும். வாகன மாற்றம் செய்வீர்கள். பங்குச்சந்தை யூகவணிகம் போட்டி பந்தயங்களில் லாபம் கிடைக்கும்.

இதுவரை சொந்தவீடு இல்லாதவர்களுக்கு இப்போது கடன் வாங்கியோ ஹவுசிங் லோன் போட்டோ, சொந்த வீடு அமையும். பெருநகரங்களில் உள்ளவர்கள் சொந்த பிளாட் வாங்குவீர்கள்.

இருக்கும் வாகனத்தை விட நல்ல சொகுசு வாகனம் வாங்குவீர்கள். சிலருக்கு இருக்கும் வாடகை வீட்டை மாற்றி புதிதாக ஒத்திக்கு எடுத்தல் நடக்கும்.

இதுவரை இருந்ததைவிட நல்லவீட்டிற்கு இப்போது மாறுவீர்கள். எதை வாங்கினாலும் வில்லங்கம் இருக்கிறதா என்று தீர விசாரியுங்கள்.

ரியல்எஸ்டேட், வீடு கட்டி விற்போர், திரவம் சம்பந்தப்பட்ட தொழில் செய்பவர்கள், காய்கறி மொத்த வியாபாரம், வெளிநாட்டு ஏற்றுமதி இறக்குமதி, சிகப்பு மற்றும் வெள்ளை நிறம் சம்பந்தப் பட்ட தொழில் செய்பவர்களுக்கு  பட்ஜெட்டை மீறி செலவுகளும் விரயங்களும் இருக்கும் என்றாலும் நல்ல வருமானம் வந்து அனைத்தையும் ஈடு கட்டும்.

புனித யாத்திரைகள் இப்போது செல்ல முடியும். வயதானவர்கள் காசி, கயா யாத்திரைகள் செல்வீர்கள். இஸ்லாமியர்களுக்கு புனித ஹஜ் பயணம் செல்லும் வாய்ப்பை இறைவன் அருளுவார். பெரிய மகான்களின் தரிசனம் கிடைக்கும். ஞானிகளின் ஜீவ சமாதிக்கு சென்று அவர்களின் அருளாசி பெறும் பாக்கியம் கிடைக்கும்.

விவசாயிகள், கலைஞர்கள், பொதுவாழ்வில் இருப்பவர்கள், ஊடகம் மற்றும் பத்திரிகைத்துறையினர், தொழிலாளர்கள், அன்றாடம் சம்பளம் வாங்குபவர்கள் போன்ற கடகராசிக்காரர்கள் இந்த நல்லநேரத்தைப் பயன்படுத்திக் கொண்டு எதிர்காலத்தை வளப்படுத்திக் கொள்ள முடியும். கடகத்திற்கு கோட்சார ரீதியில் கவலை இல்லாத வருடம் இது. எதையும் துணிந்து செய்யலாம்.

உங்கள் சுய ஜாதகத்தில் அதிக வலிமை பெற்றுள்ள கிரகம் எது என கண்டறிந்து அதற்கான இறைவழிபாடு அல்லது இரத்தின கல் அணிவதன் மூலம், இந்த விகாரி வருடத்தின் பலன்களை உங்களுக்கு முழுக்க முழுக்க சாதகமாக்கி கொள்ளுங்கள். அதன் மூலம் அனைத்து விஷயங்களிலும் நன்மைகளை மட்டுமே தரக்கூடிய வருடமாக இந்த வருடம் கடக ராசிக்கு அமையும்.

கடகம் ராசி விகாரி புத்தாண்டு பலன்கள் உங்களில் யாருக்கு நடக்கும்? யாருக்கு நடக்காது?

நன்மைகள் எவ்வளவு? தீமைகள் எவ்வளவு?

மேலே சொன்ன பலன்கள் யாவும், மேஷம் ராசியில் பிறந்த அனைவருக்கும் நடக்குமா என்ற கேள்வி வந்தால், பதில் இல்லை என்பதே. இதற்கு மூலகாரணமாக அவரவர்களின் சுய ஜாதகத்தில் நடக்கும் தசாபுத்தி பொறுத்தே பலன்கள் நடக்கும் என்பது மட்டுமல்ல. மற்றொரு கூடுதல் காரணமாக பின்வரும் லிங்க்-ல் சொல்லப்ட்டுள்ள விதிகளை பொருத்தி பாருங்கள். அவை பொருந்தும் விதம் பொருத்து உங்களுக்கு சொல்லப்பட்ட பலன்கள் நடக்கும் அளவை அறிந்து கொள்ளுங்கள். அவற்றை அன்பர்கள் புரிந்துகொள்ள வேண்டி அதன் தோராயமான அளவை மதிபெண்ணில் தரபட்டுள்ளது.

நன்மைகளின் அளவை அதிகரிப்பதற்கும், தீமைகளின் அளவை குறைக்கவும் செய்ய வேண்டிய வழிப்பாட்டு முறைகளை அறிந்து கொள்ளவும் பின்வரும் வீடியோவை கிளிக் செய்யவும்.

கடகம் ராசி விகாரி தமிழ் புத்தாண்டு பலன்கள் கடகம் 2019-2020

[wp_ad_camp_3]

மேலும் ஜோதிடம் குறித்த குறிப்புகள் மற்றும் நுணுக்கமாக விசயங்கள் அறிந்துகொள்ள எமது YouTube சேனலான SHRI JAI SAKTHI JOTHIDAM – ஐ Subscribe செய்வதுடன் அருகில் வரும் Bell – ஐயும் Click செய்து கொள்ளுங்கள்.

https://www.youtube.com/c/SHRIJAISAKTHIJOTHIDAM

மேலும் சுய ஜாதக சந்தேகங்களுக்கு (கட்டண சேவை)

ஸ்ரீ ஜெய் சக்தி ஜோதிடம், திருச்சி,

(ஜோதிட ஆராய்ச்சி நிலையம்)

எளிய பரிகார ஜோதிடர், ஜோதிட ஆச்சார்யா, பிரசன்ன ரத்னா

M.M.CHANDRA SEGARAN,

(M.M.சந்திர சேகரன்)

ஆலோசனை கட்டணம் குறித்த விபரமறிய உங்களின் ஜாதகத்தை

70102-92553 அல்லது 89730-66642 என்ற எண்ணிற்க்கு வாட்சப் அனுப்பவும்

*********************************

எம்மை வழிநடத்தும் இறைகுருவுக்கும், எம்முடைய ஜோதிட ஆசான்

குருஜி உயர்திரு ஜி.கே. அய்யா (திருப்பூர்) அவர்களுக்கும், எமது மானசீககுரு

உயர்திரு ஆதித்யகுருஜி (சென்னை) அவர்களுக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்

*********************************