ஆன்லைன் மருத்துவம் ஊரங்கடால் வீட்டிற்கே வருகிறது – Phable App

0
3326
ஆன்லைன் மருத்துவம் ஊரங்கடால் வீட்டிற்கே வருகிறது - Phable App

Contents

ஆன்லைன் மருத்துவம்

கொரோனா ஊரடங்கு நமக்கு பல புது விஷயங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. அதில் ஒன்றுதான் ஆன்லைன் மருத்துவம்.

ஆன்லைனில் மருத்துவர்களிடம் ஆலோசனை பெறுவது சில வருடங்களுக்கு முன்பே அறிமுகமானாலும் அதன் பயன்பாடு இப்பொழுதுதான் அதிகரித்துள்ளது.

இந்த பதிவில் இது போன்ற ஆன்லைனில் மருத்துவ ஆலோசனை, தொடர் உடல் ஆரோக்கிய கண்காணிப்பு, ஆன்லைனில் மருந்துகள் வாங்குவது, உடல் மற்றும் இரத்த பரிசோதனைக்கு விண்ணப்பிப்பது போன்ற அனைத்து சேவைகளும் ஒரே இடத்தில் கிடைக்கும் Phable App பற்றி பார்க்கலாம்.

ஆன்லைன் மருத்துவம் ஊரங்கடால் வீட்டிற்கே வருகிறது - Phable App

பெரும்பாலும் வயது முதிர்ந்தவர்கள், தொடர்ச்சியாக மருந்து மாத்திரை எடுத்துக்கொள்பவர்கள் மற்றும் மாதாமாதம் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனை எடுத்தே ஆக வேண்டும் என்ற நிலையில் உள்ளவர்களுக்கு இந்த Phable App பேருதவியாக இருக்கும்.

Phable App

சர்க்கரை, இரத்த கொதிப்பு, தைராய்டு, இதய நோய் போன்ற பாதிப்புகள் இருப்பவர்கள் தொடர்ச்சியாக மருந்தும் எடுத்துக்கொள்ள வேண்டும். அதே சமயம் தொடர் மருத்துவ ஆலோசனையும் பெற வேண்டும். அதாவது மருத்துவர்களின் கண்கானிப்பில் இருக்க வேண்டும்.

இந்த சூழ்நிலையில் கொரோனா ஊரடங்கு போன்ற இக்கட்டான காலக்கட்டத்திலும், வயது முதிர்வு காரணத்தினால் வரும் இயலாமையினாலும் மருத்துவ மனைக்கு செல்ல முடியாதவர்களுக்கு இந்த ஆப் சரியான தீர்வாக இருக்கும்.

Phable App சேவைகள்

  • ஆன்லைன் மருத்துவம் மற்றும் ஆலோசனை
  • ஆன்லைனில் மருந்துகள்
  • உடற் பரிசோதனைக்கு விண்ணப்பித்தல்
  • தொடர் உடல்நலம் கண்காணிப்பு
  • மருத்துவரின் தொடர் ஆன்லைன் கண்காணிப்பு

ஆன்லைனில் மருத்துவ ஆலோசனை

நாம் எந்த நோய் -க்காக ஆலோசனை பெற வேண்டுமோ அந்த நோய்க்கான மருத்துவரை தேர்ந்தெடுத்து ஒரு முறை பணம் செலுத்தி ஆலோசனை பெற்று விட்டால், நாம் அந்த மருத்துவரின் தொடர் கண்காணிப்பில் இருப்போம்.

தேவைப்பட்டால் தொலைபேசி, SMS மற்றும் வீடியோ அழைப்பு மூலமாக மருத்துவரிடம் ஆலோசனை பெற முடியும்.

மருத்துவர்கள் தரும் மருந்துகளும் நாம் இங்கேயே ஆர்டர் செய்து கொள்ளாலாம். சாதாரண சளி, காய்ச்சல், தலைவலி, திடீர் வாயிற்று வலி போன்ற பிரச்சினைகளுக்கு மருத்துவர்கள் ஆலோசனை வழங்குவார்கள்.

நீங்கள் கூறும் மற்ற நோய்களின் தன்மை மற்றும் தீவிரம் பொறுத்து மருத்துவமனை செல்வது பற்றியும் ஆலோசனை வழங்குவார்கள்.

எனவே நீங்கள் இருக்கும் இடத்திற்கு அருகில் மருத்துவமனை இல்லாத பட்சத்தில் இந்த ஆன்லைன் மருத்துவம் மற்றும் ஆலோசனை முறை உங்களுக்கு பயனளிக்கும். திடீரென்று உங்களுக்கு வரும் நோய்களுக்குத் தக்க ஆலோசனை நாம் இருக்கும் இடத்திலேயே கிடைப்பதால் பயமின்றி அடுத்தகட்ட நடவடிக்கைக்கு செல்ல முடியும்.

ஆன்லைனில் மருந்துகள்

இன்றைய காலகட்டத்தில் அனைத்து சேவைகளுமே நாம் இருக்கும் இடத்திற்கே வந்து சேர்க்கிறது. அதில் இந்த மருந்துகளும் அடங்கும்.

அதற்காக பல ஆன்லைன் மருந்து விற்பனை செயலிகள் உள்ளன. அதுபோல இந்த Phable App -லும் மருத்துவர்கள் ஆலோசனைக்கு பிறகு தரும் மருந்துகளையும், அல்லது நீங்கள் எடுத்துவரும் தொடர் மருந்துகளாக இருந்தாலும் அந்த மருந்துசீட்டை இந்த ஆப் -ல் upload செய்தும் உங்களுக்கு தேவையான மருந்துகளை நீங்கள் வாங்கிக்கொள்ள முடியும்.

ஆன்லைன் மருத்துவம் ஊரங்கடால் வீட்டிற்கே வருகிறது - Phable App

இது போல மருத்துவர்கள் மற்றும் நீங்கள் அப்லோட் செய்யும் மருந்துசீட்டுகள் எப்போதும் இதில் பாதுகாப்பாக இருப்பதால், நீங்கள் எங்கேயும், எந்த நேரத்திலும் அதை பயன்படுத்திக்கொள்ளும் வாய்ப்பு உள்ளது.

நீங்கள் வாங்கும் மருந்துகளுக்கு குறைந்தது 20% முதல் தள்ளுபடி கிடைக்கும். அது ஒரு சில நேரங்களில் அதிகரிக்கவும் கூடும். இது தற்போதைய நிலையில்.

உடற்பரிசோதனைக்கு விண்ணப்பித்தல்

மருத்துவர்கள் சொல்லும் பட்சத்தில் நீங்கள் பரிசோதனை எடுக்க வேண்டும் என்றால் இந்த ஆப் -லேயே புக் செய்து கொள்ளலாம். நமது அருகே உள்ள லேப் -ஐ தேர்ந்தெடுத்து எந்த மாதிரி பரிசோதனையோ அதை தேர்வு செய்வு செய்து பணம் செலுத்திவிட்டால் போதும். நமது வீட்டிற்கே வந்து மாதிரிகளை சேகரித்து செல்வார்கள்.

வீட்டிற்கு வந்து மாதிரிகள் எடுப்பதற்கென்று தனியாக கட்டணங்கள் கிடையாது. பரிசோதனை முடிவுகள் இமெயில் மூலமாகவும் அல்லது நமது வீட்டிற்கே வந்து சேரும் விதமாகவும் நமக்கு கிடைக்கும்.

முடிவுகளை நாம் Phable App -ல் அப்லோடு செய்து, பின்னர் அதற்கான ஆலோசனைகளை மருத்துவரிடமிருந்து பெறலாம்.

தொடர் உடல்நலம் கண்காணிப்பு

நீங்கள் பயன்படுத்தும் அனைத்து வகையான Fitness bands, Bluetooth health devices போன்றவைகளை இந்த ஆப் உடன் இணைத்ததுக் கொள்ளமுடியும்.

எனவே அவ்வப்போது உங்கள் உடலின் க்ளுக்கோஸ், கொழுப்பு, இதயத்துடிப்பு போன்ற விவரங்களை இந்த ஆப் -ல் பதிவு செய்து வைக்க முடியும்.

மருத்துவரின் தொடர் ஆன்லைன் கண்காணிப்பு

இவ்வாறு நாம் பயன்படுததும் Fitness bands, Bluetooth health devices -ன் பதிவுகள் phable ஆப் -ல் சேமிக்கப்படுவதால் உங்களுடன் App -ல் இணைந்திருக்கும் மருத்துவரும் இந்த பதிவுகளை கண்காணிக்க முடியும்.

இதனால் உடனுக்குடன் ஆலோசனையும், தகவல்களையும் மருத்துவரால் உங்களுக்கு வழங்க முடியும்.

மேலும் இந்த ஆப் -ல் ஆயுவேதிக், சித்த மருத்துவ குறிப்புகள் அடங்கிய மருத்துவ குறிப்புகளும் கிடைக்கும்.




மருத்துவ ஆலோசனை ஆன்லைன் best doctor consultation app DocsApp