விருச்சிகம் ராசிக்கான குருப்பெயர்ச்சி பலன்கள் 2018 – 2019

0
726
Viruchigam, Viruchigam rasi, Viruchigam, mesah rasi, mesa rasi, Viruchigam rasi guru peurchi, Viruchigam guru peyarchi, Viruchiga rasi guru peyarchi, Viruchigam rasi guru peyarchi palangal, Viruchiga rasi guru peyarchi palangal,விருச்சிகம், விருச்சிகம் ராசி, விருச்சிக ராசி, விருச்சிக ராசி குருப்பெயர்ச்சி, விருச்சிக ராசி குருப்பெயர்ச்சி பலன்கள்,விருச்சிகம் ராசி குருப்பெயர்ச்சி, விருச்சிகம் ராசி குருப்பெயர்ச்சி பலன்கள், விருச்சிக ராசி குருப்பெயர்ச்சி வழிபாடு, விருச்சிகம் ராசி குருப்பெயர்ச்சி வழிபாடு, Viruchiga rasi guru peyarchi 2018 in tamil , Scorpio horoscope 2018, Scorpio, Scorpio guru peyarchi 2018, விருச்சிகம் ராசி குருப்பெயர்ச்சி பலன்கள் 2018, விருச்சிக ராசி குருப்பெயர்ச்சி பலன்கள் 2018, guru peyarchi 2018 , guru peyarchi 2018 to 2019 predictions , guru peyarchi 2018 to 2019 in tamil , guru peyarchi 2018 to 2019 date , guru peyarchi 2018 to 2019 date in tamil , guru peyarchi 2018 to 2019 predictions in tamil , guru peyarchi palangal 2018 to 2019 in tamil , guru peyarchi 2018 to 2019 in tamil, குருப்பெயர்ச்சி பலன்கள், குருப்பெயர்ச்சி பலன்கள் 2018, http://www.dosomethingnew.in/,

குருப்பெயர்ச்சி 2018 2019

விருச்சிகம்

விருச்சிகம் ராசிக்கான குருப்பெயர்ச்சி பலன்கள்

பலன்கள் யாருக்கு நடக்கும்

பலன்கள் யாருக்கு நடக்காது

குருப்பெயர்ச்சி பலன்கள்

விருச்சிகம் ராசிக்கு இதுவரை பனிரெண்டாமிடத்தில் இருந்து விரயங்களையும் செலவுகளையும் கொடுத்து வந்த குருபகவான் இப்போது உங்கள் ராசிக்கே இடம் பெயர்ந்து ஜன்மகுருவாக மாறுகிறார். இந்த நிலை சுமாரானதுதான் என்றாலும் கெடுதல்கள் எதையும் குரு உங்களுக்குத் தரமாட்டார் என்பது உறுதி.

குரு நிற்க போவது                     – ராசியில் (முதலிடம்)      –     (விருச்சிகம்)

குருவின் ஐந்தாம் பார்வை        – ஐந்தாமிடம்                      –     (மீனம்)

குருவின் ஏழாம் பார்வை          – ஏழாமிடம்                         –     (ரிஷபம்)

குருவின் ஒன்பதாம் பார்வை    – ஒன்பதாமிடம்                  –     (கடகம்)

சென்ற வருடத்தை விட இந்த வருடம் உங்களுக்கு வருமானம் மிகவும் நன்றாக இருக்கும். பணவரவும் சரளமாக இருக்கும். மேலும் இம்முறை உங்களுக்கு தொழில் மேன்மை மற்றும் பொருளாதார வசதிகளை குருபகவான் அளிப்பார்.

பொதுவாக எந்த ஒரு அமைப்பிலோ, அல்லது நிர்வாகத்திலோ தலைமைப் பொறுப்பில் இருப்பவர்களுக்கு ஜன்மகுரு நன்மைகளைச் செய்வது இல்லை. அதாவது பெரிய தலைவர்கள், ஒரு பெரும் நிறுவனத்தை வழி நடத்துபவர்கள் போன்றவர்களுக்குத்தான் சில அனுபவங்களை ஜென்மகுரு தரும். மற்றவர்களுக்கு தீய பலன்கள் இருக்காது.

இதுவரை நடக்காமல் இருந்த நல்ல விஷயங்கள் நடக்கும். தாமதமாகிப் போனவைகள் கிடைக்கும். மாறும் கிரகநிலைகள் இப்போது மகிழ்ச்சியையும், வருமானத்தையும் தரும். சிந்தனை, செயல்திறன் ஆக்கப்பூர்வமாக இருக்கும். எதிர்மறை எண்ணங்கள் நீங்கி மனதில் தன்னம்பிக்கை குடி கொள்ளும். கௌரவம், அந்தஸ்து கூடும்படியான சம்பவங்கள் நடக்கும். கையில் பணப்புழக்கம் அதிகரித்து உங்களுடைய சொல்லை அனைவரும் கேட்கும் நிலை உருவாகும்.

சொந்தத் தொழில் செய்பவர்களுக்கு மிகப் பெரிய திருப்பு முனையான நல்ல சம்பவங்கள் இந்த வருடம் நடக்க இருக்கிறது. தொழிலை விரிவு படுத்தும் எண்ணங்கள் ஈடேறும். தொழில், வியாபாரம் போன்றவைகள் முன்னேற்ற வழியில் இருக்கும். அதேநேரத்தில் வேலைப்பளுவும் அதிகமாக இருக்கும்.

ராசியில் ஜென்மகுரு இருப்பதால் ஏதேனும் ஒரு விஷயத்தைப் பற்றிய தீவிர சிந்தனையும், மனக்குழப்பமும் இருக்கும். மனதைப் போட்டு உழப்பிக் கொண்டிருப்பீர்கள். சிலருக்கு மறைமுக வழியில் தனலாபங்கள் இருக்கும். எப்படி வந்தது என்று வெளியில் சொல்ல முடியாத வகையில் பண வரவுகளும் இந்தக் குருப் பெயர்ச்சியால் இருக்கும்.

அடிக்கடி ஞாபகமறதி வரும். கைப்பொருளை எப்போதும் பாதுகாப்பாக வைத்துக் கொள்ளுவது நல்லது. வங்கியிலிருந்து பணம் எடுக்கும் போதோ அல்லது பெரிய தொகைகளை கையாளும்போதோ கவனமாக இருக்கவேண்டியது அவசியம்.

 குருப்பெயர்ச்சி நிகழும் நாள்

  • வாக்கியப்படி, புரட்டாசி மாதம் 18-ம் தேதி, (04.10.2018 – வியாழன்)
  • திருக்கணிதப்படி, புரட்டாசி மாதம் 25-ம் தேதி, (11.10.2018 – வியாழன்)

குருவின் சுப பார்வையானது, விருச்சிகம்  ராசியினருக்கு ஐந்து, ஏழு மற்றும் ஒன்பது ஆகிய இடங்களில் விழுகிறது. இதனால் மேற்கண்ட பாவங்களின் அமைப்புகளில் உங்களுக்கு நல்ல பலன்கள் நடக்கும்.

புத்திரதோஷத்தினால் நீண்டகாலமாக குழந்தை இல்லாத தம்பதிகளுக்கு இப்போது குழந்தை பிறக்கும் நேரம் வந்து விட்டது. குருபகவான் புத்திர காரகன் என்பதால் அவர் ஐந்தாமிடத்தைப் பார்க்கும் இந்தநேரத்தில் எப்பேர்ப்பட்ட தோஷம் இருந்தாலும் அதை நீக்கி குழந்தை பாக்கியம் அருளுவார்.

குலதெய்வத்தின் அருளைப் பெற வேண்டிய நேரம் இது என்பதால் தள்ளிப் போயிருந்த குலதெய்வ வழிபாட்டினை நேர்த்திக் கடன்களுடன் நிறைவேற்ற முடியும். இதுவரை போகாத திருத்தலங்களுக்குச் செல்வீர்கள். தர்மகாரியங்கள் மற்றும் அறப்பணிகளில் ஈடுபட வாய்ப்புகள் கிடைக்கும். ஒரு சிலர் உங்களை ஆலயத் தொண்டில் ஈடுபடுத்திக் கொள்வீர்கள்.

குருவின் ஏழாமிட பார்வையால் குடும்பத்தில் இருந்து வந்த பிரச்சினைகள் தீரும். கணவன் மனைவி உறவு நல்லபடியாக மாறும். கருத்து வேறுபாடு, குடும்ப பிரச்னைகள் அல்லது வேலை விஷயமாக பிரிந்து இருந்த தம்பதியினர் ஒன்று சேர்வார்கள். வேறு வேறு இடங்களில் பணிபுரிந்த கணவன், மனைவிக்கு ஒரே இடத்தில் பணிமாறுதல் கிடைத்து குடும்பம் ஒன்று சேரும்.

உடல்நலம்

உடல்நலம் சரியில்லாமல் இருந்தவர்களின் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் தெரியும். இதுவரை குரு பகவானால் இருந்து வந்த விரயச் செலவுகள் இனிமேல் இருக்காது. எனவே ஏதேனும் ஒரு தொகையை அது சிறியதாக இருந்தாலும் சேமிக்க முடியும்.

குடும்பத்தில் மங்கள காரியங்கள் நடக்கும் என்பதால் வருமானம் வந்தாலும் அதற்கு ஏற்ப சுபச் செலவுகளும் இருக்கும். சொத்து வாங்குவீர்கள். மனைவிக்கு நகை, பெண்குழந்தைகளின் திருமணத்திற்கென்று நகைசேமிப்பு போன்றவைகளை இப்போது செய்ய முடியும்.

பெண்களுக்கு இந்தப் பெயர்ச்சியில் நன்மைகள் அதிகமாக இருக்கும். குடும்பத்தில் உள்ளவர்களிடம் உங்களின் பேச்சு எடுபடும். மாமியாரிடம் பாராட்டு கிடைக்கும். புகுந்த வீட்டில் மதிக்கப் பெறுவீர்கள். பணிபுரியும் இடத்தில் இருந்து வந்த சிக்கல்கள் தீரும். அந்தஸ்து கௌரவம் உயரும். வேலைக்குச் செல்லும் பெண்கள் மதிப்புடன் நடத்தப்படுவீர்கள். கீழே வேலை செய்பவர்கள் உங்களுக்கு கட்டுப்பட்டு இருப்பார்கள்.

காதல்

காதலித்துக் கொண்டிருக்கும் இளைய பருவத்தினருக்கு பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் கை கூடி வரும். சிலர் புதிதாக காதலிக்க ஆரம்பித்து தங்களது வாழ்க்கைத் துணையை அடையாளம் காண்பார்கள். முதல் திருமணம் முறிந்து விவாகரத்தாகி இரண்டாவது வாழ்க்கையை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருப்பவர்களுக்கு இப்போது நல்ல வழி பிறக்கும்.

குழந்தைகளால் பெருமைப் படத்தக்க சம்பவங்கள் இருக்கும். பிள்ளைகள் மூலம் நல்ல செய்திகளை எதிர்பார்க்கலாம். அவர்களின் கல்வியில் முன்னேற்றங்கள் இருக்கும். குழந்தைகள் விரும்பும் பள்ளியிலோ, படிப்பிலோ அவர்களை சேர்த்து விட முடியும். நல்ல காலேஜில் சீட்டு கிடைக்கும்.

புனித யாத்திரைகள் செல்ல முடியும். வயதானவர்கள் காசி, கயா செல்வீர்கள். இஸ்லாமியர்களுக்கு புனித ஹஜ் பயணம் செல்லும் வாய்ப்பை இறைவன் அருளுவார். மகான்களின் தரிசனம் கிடைக்கும். ஞானிகளின் ஜீவ சமாதிக்கு சென்று அவர்களின் அருளாசி பெறும் பாக்கியம் கிடைக்கும்.

வெளிநாடு சம்பந்தப்பட்ட அனைத்து விஷயங்களும் உங்களுக்கு கை கொடுக்கும். வெளிநாட்டில் படிக்கவோ, வேலை செய்யவோ முயற்சிப்பவர்களுக்கு உடனடியாக விசா கிடைக்கும். இதுவரை வெளிநாடு செல்லாதவர்கள் இப்போது வெளிநாட்டுப் பயணம் செல்லும்படி இருக்கும். பயணங்கள் மூலம் நன்மைகள் இருக்கும்.

பூர்வீக சொத்தில் இதுவரை இருந்துவந்த வில்லங்கம் விலகும். பாகப் பிரிவினைகள் சம்பந்தமாக வழக்கு உள்ளவர்களுக்கு தீர்ப்பு சாதகமாக வரும். பங்காளிச்சண்டை தீரும். தந்தைவழி உறவினர்கள் ஆதரவு கிடைக்கும். தந்தையிடம் இருந்து உதவிகளோ பொருள் வரவுகளோ இருக்கும்.

மேலும் சில முக்கிய பலன்கள்

இதுவரை வீடு வாங்க தடை இருந்தவர்களுக்கு இந்த தடை நீங்கி நல்ல வசதியான ஆடம்பர வீடு அமைய போகிறது. வாடகை வீட்டில் இருப்பவர்கள் இனிமேல் குத்தகை அடிப்படை வீட்டிற்காவது மாற முடியும். நீண்ட நாட்களாக சொந்தவீடு வாங்க வேண்டும் என்ற எண்ணத்தில் இருப்பவர்களின் ஆசை இப்போது நிறைவேறும்.

வீடு சம்பந்தப்பட்ட அனைத்துக் காரியங்களும் நினைத்தபடியே நிறைவேறும். வீடு கட்ட ஆரம்பித்து பாதியில் நிறுத்தியவர்கள் முழுதாக முடித்து கிரகப் பிரவேசம் செய்வீர்கள். எதிர்கால முதலீடாக குழந்தைகள் பெயரிலோ அல்லது உங்கள் பேரிலோ வீட்டுமனை வாங்குவீர்கள். வங்கிக்கடன் வாங்கி வீடு கட்டவோ நல்ல பிளாட் வாங்கவோ முடியும்.

இதுவரை வாகனம் அமையாதவர்களுக்கு வாகனம் அமையும். இருக்கும் வாகனத்தை விற்று விட்டு நல்ல வாகனம் வாங்க முடியும். வாகன யோகம் வந்து விட்டதால் வாங்க வேண்டும் என்று நினைத்திருந்த அதே மாடலில் புதிய வாகனம் வாங்குவீர்கள். சொகுசு வாகனம் வாங்குவதற்கும் அமைப்பு இருக்கிறது.

தாய்வழி சொந்தங்களிடம் இதுவரை இருந்து வந்த கருத்து வேற்றுமைகள் தீரும். அம்மாவின் ஆதரவு கிடைக்கும். தாயார் வழியில் நன்மைகள் உண்டு. மாமன்கள், சித்திகள் உதவுவார்கள். உயர்கல்வி கற்க இருந்து வந்த தடைகள் நீங்கி சிலர் மேற்படிப்பு படிப்பீர்கள்.

மொத்தத்தில் இந்தக் குருப்பெயர்ச்சி கெடுதல்கள் எதுவும் இல்லாமல் எதிர்காலத்தில் நீங்கள் சிறப்பாக இருக்க வேண்டியதற்கான அடிப்படை விஷயங்களைச் செய்யும்.

யாருக்கு பலன்கள் நடக்கும்?

      இது மேலே சொல்லப்பட்ட பலன்கள் யாவும், விருச்சிகம் ராசியில் பிறந்த அனைவருக்கு நடக்குமா என்ற கேள்வி வந்தால், பதில் இல்லை என்பதே.

இதற்கு மூலகாரணமாக அவரவர்களின் சுய ஜாதகத்தில் நடக்கும் தசாபுத்தி பொறுத்தே பலன்கள் நடக்கும் என்பதே. இதில் ஒரு கூடுதல் காரணமாக இன்னொரு விசயத்தையும் சொல்லலாம்.

விருச்சிகம் ராசியில் பிறந்த அன்பர்களின், ஜாதகத்தில், பின்வரும் விதிகளை பொருத்தி பாருங்கள். அவை முழுதும் பொருந்தும் பொது உங்களுக்கு சொல்லப்பட்ட பலன்கள் நிச்சயம் நடக்கும். இல்லையேல் பலன்கள் நடக்கும்படி வந்து கை நழுவி போகும். அதாவது கைக்கு கிடைப்பது வாய்க்கு கிடைக்காமல் போகும்.

 பலன்கள் நடக்க தேவையான அமைப்பு

(அவரவர் சுய ஜாதகத்தில்)

  • விருச்சிகத்தில் உங்கள் லக்ன சுபர்கள் இருக்க வேண்டும்
  • விருச்சிகத்தில் உங்கள் லக்ன அசுபர்கள் இருக்க வேண்டும்
  • விருச்சிகத்தில் உங்கள் லக்ன சமர்கள் இருக்க வேண்டும்
  • மீனத்தில் உங்கள் லக்ன சுபர்கள் இருக்க வேண்டும்
  • மீனத்தில் உங்கள் லக்ன அசுபர்கள் இருக்க வேண்டும்
  • மீனத்தில் உங்கள் லக்ன சமர்கள் இருக்க வேண்டும்
  • ரிஷபத்தில் உங்கள் லக்ன சுபர்கள் இருக்க வேண்டும்
  • ரிஷபத்தில் உங்கள் லக்ன அசுபர்கள் இருக்க வேண்டும்
  • ரிஷபத்தில் உங்கள் லக்ன சமர்கள் இருக்க வேண்டும்
  • கடகத்தில் உங்கள் லக்ன சுபர்கள் இருக்க வேண்டும்
  • கடகத்தில் உங்கள் லக்ன அசுபர்கள் இருக்க வேண்டும்
  • கடகத்தில் உங்கள் லக்ன சமர்கள் இருக்க வேண்டும்

பலன்கள் நடக்கும் விதமும் தன்மையும்

  • சுய ஜாதக லக்ன சுபர்கள் இருப்பின், நன்மை துரிதமாக அதிகமாக நடக்கும், மிகவும் திருப்தி அடைவீர்கள்
  • சுய ஜாதக லக்ன அசுபர்கள் இருப்பின், நன்மையானது தடை, தாமதித்திற்கு பின் நடக்கும். திருப்தி அடையமாட்டீர்கள்
  • சுய ஜாதக லக்ன சமர்கள் (சம கிரகங்கள்) இருப்பின், நன்மையானது சரியான நேரத்தில், சரியான அளவில் கிடைக்கும். திருப்தியும் அடைவீர்கள்

Viruchigam, Viruchigam rasi, Viruchigam, mesah rasi, mesa rasi, Viruchigam rasi guru peurchi, Viruchigam guru peyarchi, Viruchiga rasi guru peyarchi, Viruchigam rasi guru peyarchi palangal, Viruchiga rasi guru peyarchi palangal,விருச்சிகம், விருச்சிகம் ராசி, விருச்சிக ராசி, விருச்சிக ராசி குருப்பெயர்ச்சி, விருச்சிக ராசி குருப்பெயர்ச்சி பலன்கள்,விருச்சிகம் ராசி குருப்பெயர்ச்சி, விருச்சிகம் ராசி குருப்பெயர்ச்சி பலன்கள், விருச்சிக ராசி குருப்பெயர்ச்சி வழிபாடு, விருச்சிகம் ராசி குருப்பெயர்ச்சி வழிபாடு, Viruchiga rasi guru peyarchi 2018 in tamil , Scorpio horoscope 2018, Scorpio, Scorpio guru peyarchi 2018, விருச்சிகம் ராசி குருப்பெயர்ச்சி பலன்கள் 2018, விருச்சிக ராசி குருப்பெயர்ச்சி பலன்கள் 2018, guru peyarchi 2018 , guru peyarchi 2018 to 2019 predictions , guru peyarchi 2018 to 2019 in tamil , guru peyarchi 2018 to 2019 date , guru peyarchi 2018 to 2019 date in tamil , guru peyarchi 2018 to 2019 predictions in tamil , guru peyarchi palangal 2018 to 2019 in tamil , guru peyarchi 2018 to 2019 in tamil, குருப்பெயர்ச்சி பலன்கள், குருப்பெயர்ச்சி பலன்கள் 2018, http://www.dosomethingnew.in/,

  • விருச்சிகத்தில் இருக்கும் கிரகங்களுடன் குரு இணையும்போது கிடைக்கும் பலன் ஒரு நட்புணர்வு தன்மையானது இருக்கும்.(நட்புக்காக ஒரு விஷயம் செய்வது போல)
  • மீனத்தில் இருக்கும் கிரகங்களுடன் குரு இணையும்போது கிடைக்கும் பலனில் ஒரு ஆட்சி தன்மையானது இருக்கும்.(சுய விருப்பத்துடன், யாருக்காகவும் அல்லாமல், மனதார ஒரு விஷயம் செய்வது போல)
  • ரிஷபத்தில் இருக்கும் கிரகங்களுடன் குரு இணையும்போது கிடைக்கும் பலனில் ஒரு பகை தன்மையானது இருக்கும்.(பிடிக்காத நிலையில், வேறு வழியின்றி, ஒரு விஷயம் செய்வது போல)
  • கடகத்தில் இருக்கும் கிரகங்களுடன் குரு இணையும்போது கிடைக்கும் பலன் ஒரு நட்புணர்வு தன்மையானது இருக்கும்.(நட்புக்காக ஒரு விஷயம் செய்வது போல)
  • உங்களுக்கு அல்லது உங்கள் வீட்டில் இருக்கும் யாருக்காவது, குரு மகாதிசையோ, குரு புத்தியோ நடந்தால், பலன்கள் இரட்டிப்பு ஆகும்.

யாருக்கு பலன்கள் நடக்காது?

  • உங்கள் சுய ஜாதகத்தில் விருச்சிகம், மீனம், ரிஷபம், கடகம் ஆகிய இடங்களில் எந்த கிரகமும் இல்லாத போது இந்த குருபெயர்ச்சி உங்களுக்கு பெரிதாய் ஒன்றும் நன்மைகளையோ, தீமைகளையோ செய்யபோவதில்லை என்பதினை மனதில் நன்கு பதிய வையுங்கள்.
  • உங்கள் ராசி மேல் குரு செல்வதால், நிச்சயமாக இந்த குருபெயர்ச்சி உங்களுக்கு நன்மை செய்யாமல் போகாது (மற்ற இடங்களான மீனம், ரிஷபம், கடகம் போன்ற இடங்களில் எந்த கிரகமும் இல்லாத போதும்)

இறைவழிபாடு

உங்கள் சுய ஜாதகத்தில் குரு இருக்கும் நிலை பொறுத்து இறைவழிபாடு செய்யும்போது குருவின் பரிபூரண அருள் உங்களுக்கு கிடைக்கும்.

மேஷம் அல்லது விருச்சிகத்தில் குரு        –     செவ்வாய்க்கிழமை

ரிஷபம் அல்லது துலாமில் குரு                 –     வெள்ளிக்கிழமை

மிதுனம் அல்லது கன்னியில் குரு             –     புதன்கிழமை

கடகத்தில் குரு                                           –     திங்கட்கிழமை

சிம்மத்தில் குரு                                          –     ஞாயிற்றுக்கிழமை

தனுசு அல்லது மீனத்தில் குரு                   –     வியாழக்கிழமை

மகரம் அல்லது கும்பத்தில் குரு                –     சனிக்கிழமை                   

வழிப்பாட்டு ஸ்தலங்கள்

  • திருச்செந்தூர் முருகன் கோயில்
  • ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் கோயில்

சொல்லப்பட்ட இரண்டு கோயில்களில் ஏதேனும் ஒரு கோயிலுக்கு குருபெயர்ச்சிக்கு முன்னரோ, பின்னரோ இரண்டு மாதங்களுக்குள், உங்கள் சுய ஜாதகத்தில் குரு எங்கு உள்ளார் என்பதை முதலில் தெரிந்து, அதற்கு ஏற்ற கிழமைகளில், அன்றைய நாளின் சூரிய உதய நேரத்தில் இருந்து ஏழு மணிநேரம் வரையிலும் கோயிலுக்குள் இருந்து இறைவழிபாடு செய்ய, குருவின் பரிபூரண அருள் உங்களுக்கு கிடைக்கும்.

Viruchigam, Viruchigam rasi, Viruchigam, mesah rasi, mesa rasi, Viruchigam rasi guru peurchi, Viruchigam guru peyarchi, Viruchiga rasi guru peyarchi, Viruchigam rasi guru peyarchi palangal, Viruchiga rasi guru peyarchi palangal,விருச்சிகம், விருச்சிகம் ராசி, விருச்சிக ராசி, விருச்சிக ராசி குருப்பெயர்ச்சி, விருச்சிக ராசி குருப்பெயர்ச்சி பலன்கள்,விருச்சிகம் ராசி குருப்பெயர்ச்சி, விருச்சிகம் ராசி குருப்பெயர்ச்சி பலன்கள், விருச்சிக ராசி குருப்பெயர்ச்சி வழிபாடு, விருச்சிகம் ராசி குருப்பெயர்ச்சி வழிபாடு, Viruchiga rasi guru peyarchi 2018 in tamil , Scorpio horoscope 2018, Scorpio, Scorpio guru peyarchi 2018, விருச்சிகம் ராசி குருப்பெயர்ச்சி பலன்கள் 2018, விருச்சிக ராசி குருப்பெயர்ச்சி பலன்கள் 2018, guru peyarchi 2018 , guru peyarchi 2018 to 2019 predictions , guru peyarchi 2018 to 2019 in tamil , guru peyarchi 2018 to 2019 date , guru peyarchi 2018 to 2019 date in tamil , guru peyarchi 2018 to 2019 predictions in tamil , guru peyarchi palangal 2018 to 2019 in tamil , guru peyarchi 2018 to 2019 in tamil, குருப்பெயர்ச்சி பலன்கள், குருப்பெயர்ச்சி பலன்கள் 2018, http://www.dosomethingnew.in/,

குறிப்பிட்ட ஸ்தலங்களுக்கு செல்ல முடியாதவர்கள் அருகில் இருக்கும் சிவன் கோயில்களில், உங்கள் சுய ஜாதகத்தில் குரு எங்கு உள்ளார் என்பதை முதலில் தெரிந்து, அதற்கு ஏற்ற கிழமைகளில், குருபெயர்ச்சிக்கு முன்னரோ, பின்னரோ இரண்டு மாதங்களுக்குள், தொடர்ந்து மூன்று வாரம், நவகிரக குருவுக்கு,  மஞ்சள் நிற இனிப்பான லட்டு நைவேத்தியம் செய்து, நெய் தீபம் ஏற்றி வர குருவின் பரிபூரண அருள் உங்களுக்கு கிடைக்கும். (இங்கு ஏழு மணிநேரம் கோவிலுக்குள்ளேயே இருக்க வேண்டிய அவசியமில்லை)

*********************************

விருச்சிகம் ராசி -க்கான குருபெயர்ச்சி பலன்கள் வீடியோ

மேலும் ஜோதிடம் குறித்த குறிப்புகள் மற்றும் நுணுக்கமாக விசயங்கள் அறிந்துகொள்ள எமது YouTube சேனலான SHRI JAI SAKTHI JOTHIDAM – ஐ Subscribe செய்வதுடன் அருகில் வரும் Bell – ஐயும் Click செய்து கொள்ளுங்கள்.

https://www.youtube.com/c/SHRIJAISAKTHIJOTHIDAM

மேலும் குரு பெயர்ச்சி மற்றும் சுய ஜாதக சந்தேகங்களுக்கு (கட்டண சேவை)

ஸ்ரீ ஜெய் சக்தி ஜோதிடம், திருச்சி

(ஜோதிட ஆராய்ச்சி நிலையம்)

எளிய பரிகார ஜோதிடர்

ஜோதிட ஆச்சார்யா

பிரசன்ன ரத்னா

M.M.CHANDRA SEGARAN

(M.M.சந்திர சேகரன்)

89730-66642, 70102-92553 

(இரண்டு எண்களும் வாட்சப்பில் உள்ளன)

*********************************

எம்மை வழிநடத்தும் இறைகுருவுக்கும், எம்முடைய ஜோதிட ஆசான்

குருஜி  உயர்திரு ஜி.கே. அய்யா அவர்களுக்கும், எமது மானசீககுரு

உயர்திரு ஆதித்யகுருஜி  அவர்களுக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.

*********************************

இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் உங்கள் நட்புகளும் உறவுகளும் பயன்பெற கீழே உள்ள சமூக வலைதளங்களில் ஷேர் செய்யுங்கள். நன்றி.