தொப்பை குறைய எளிய வழிகள் தொப்பை குறைய என்ன செய்ய வேண்டும் ?

0
3718
thoppai, thoppai kuraiya, thoppai kuraiya eliya vazhikal, thopaai kuraiika tips, தொப்பை, தொப்பை குறைய, தொப்பை குறைய வழிகள், தொப்பை குறைய வழிகள்,

Contents

கெட்ட கொழுப்பு – தொப்பை

சுத்தமான உணவுகளை சாப்பிடாமல், கடைகளில் கிடைக்கும் துரித உணவுகளை வாங்கி சாப்பிடுவதனால்தான் தேவையில்லாத கொழுப்புகளை உடலில் உண்டாகிறது. இத்தகைய கெட்ட கொழுப்புகளினால் தான் தொப்பை போடுகிறது. மேலும் உடல் எடை அதிகரிப்பு, இரத்த ஓட்டத்தில் மாற்றம், மாரடைப்பு போன்ற நோய்களும் ஏற்பட காரணமாகிறது. கெட்ட கொழுப்புகள் உருவாவதற்கு முக்கிய காரணமே குப்பை உணவுகள் (ஜங்க் உணவு) தான்.

கெட்ட கொழுப்புகளை நீக்குவதற்கு முதலில் உடற்பயிற்சி செய்யவேண்டும். இதனால் உடலில் உள்ள கொழுப்புகள் கரைந்து விடும்.

காலை உணவு சாப்பிடாமல் இருந்தால் உடல் எடை குறையும் என்று சிலர் நினைக்கின்றனர். ஆனால், அது உடல் எடையை பருமனடையச் செய்யும். மேலும், பசியை ஏற்படுத்தி வயிற்று கொழுப்புகள்அதிகமாக உருவாவதற்கு வழிச் செய்யும். ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளை சாப்பிட்டு வந்தால் தேவையில்லாத கொலஸ்ட்ராலிலிருந்து விடுபடலாம்.

thoppai, thoppai kuraiya, thoppai kuraiya eliya vazhikal, thopaai kuraiika tips, தொப்பை, தொப்பை குறைய, தொப்பை குறைய வழிகள், தொப்பை குறைய வழிகள்,

மேலும் கொழுப்புகளை கரைப்பதற்கான பல வழிகள்

  • மஞ்சத்தூளை அதிகமாக உணவில் சேர்த்துக் கொண்டால் இதயத்தில் படியும் கொழுப்புகளை அகற்றி சுத்தப்படுத்தும் தன்மை உடையது. மேலும், மாரடைப்பு நோயிலிருந்தும் விடுபடலாம்.
  • ஆலிவ் ஆயிலில் கொழுப்புகளைக் குறைக்கும் சக்தி அதிக அளவு உள்ளது.
  • ஆப்பிளில் ஆண்டி ஆக்ஸிடன்ட் மற்றும் பெக்டின் உள்ளது. பெக்டின் கரையக் கூடிய தன்மை கொண்டது. இதனால் கொழுப்பைக் குறைக்கும் சக்தி ஆப்பிளிற்கு அதிகம் உண்டு. இதில் அசிட்டிக் ஆசிட் உள்ளதால் கொழுப்பை உடலில் சேராமலும் தடுக்கும்.
  • தினமும் வாழைப்பழம் சாப்பிட்டு வந்தால் கொழுப்புகளிலிருந்து விடுபடலாம்.
  • எலுமிச்சை மற்றும் ஆரஞ்சு பழங்களை தினசரி சாப்பிட்டால் கொழுப்புகளைக் குறைக்கலாம்.
  • திராட்சைக்கும் இச்சக்தி அதிகமாக உண்டு. மேலும் இதில் விட்டமின் C அதிகளவில் இருப்பதால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் செய்யும்.
  • மீன் மற்றும் நண்டு இவற்றிற்கு அதிகமாக கொழுப்புகளை நீக்கும் சக்தி உள்ளது.
  • கேரட்டில் வைட்டமின் டி மற்றும் பீட்டா கரோட்டின் சத்துக்கள் அதிகளவில் உள்ளன. தினசரி கேரட்டை சாப்பிட்டு வந்தால் கெட்டக் கொழுப்புகளிலிருந்து விடுபடலாம்.
  • கொள்ளுவை உணவில் அடிக்கடி சேர்த்துக் கொண்டால் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகளைக் குறைத்து சமநிலையில் வைத்துக் கொள்ளும்.
  • கத்திரிக்காயில் அதிக அளவு நார்சத்துக்கள் உள்ளன. எனவே, உடலில் உள்ள கொலஸ்ட்ராலை உறிஞ்சி மிக விரைவில் கரைக்கும் தன்மையுடையது. மேலும், நல்ல கொழுப்புகளை அதிகரிக்கச்செய்யும்.
  • சிறுதானியங்களில் அதிக அளவு நார்சதுக்கள் மற்றும் சிலியம் உள்ளது. சிலியம் கரையக் கூடியது. எனவே சிறுதானியங்களை உணவில் அடிக்கடி எடுத்துக்கொண்டால் கெட்ட கொழுப்புகள் உடலில் சேருவதை தடுக்கலாம்.
  • ஓட்ஸை உணவில் சேர்த்துக் கொண்டால் கொலாஸ்ட்ராலில் இருந்து விடுபடலாம். மேலும், இவற்றில் வைட்டமின் இ, துத்தநாகம், செம்பு, மெக்னீசியம் மற்றும் இரும்புச்சத்துகள் உள்ளன. மேலும், இவற்றில் உள்ள பீட்டா குளுக்கான் கெட்ட கொழுப்புகளை கரைத்து உடலின் கொழுப்பின் அளவையும் சீரான நிலையில் வைத்திருக்கும்.
  • உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகளை அழிக்கும் சக்தி மிளகாய்க்கு அதிகம் உண்டு.
  • இலவங்கப்பட்டையை அதிகமாக உணவில் சேர்த்துக் கொண்டால் கொழுப்புகளைக் குறைக்கலாம்.
  • பூண்டில் அல்லிசின் என்ற வேதிப்பொருள் உள்ளது. அதனால் பூண்டை அதிகமாக உணவில் சேர்த்துக் கொண்டால் தேவையற்ற கொழுப்புகளை அழித்து விடும். முட்டையின் வெள்ளைக் கருவில் குறைந்த அளவு கொழுப்புகளும் அதிக சத்துகளும் உள்ளன. ஏனெனில், இவை உடலில் உள்ள கெட்ட கொழுப்புகளை அளித்து உடலுக்கு தேவையான அனைத்து சக்தியையும் கொடுக்கும்.

இத்தகைய ஆரோக்கியமான உணவுகளை சாப்பிட்டு தேவையற்ற உணவின் அளவை குறைத்து, கெட்ட கொழுப்புகள் உருவாவதைத் தடுத்து ஆரோக்கியமான உடல் நலத்தை பெறலாம்.