இரு சக்கர வாகன காப்பீடு – டூவீலர் இன்சூரன்ஸ் மற்றும் கார் இன்சூரன்ஸ் ஆன்லைனில் புதுப்பிப்பது எப்படி?

0
5473
இரு சக்கர வாகன காப்பீடு - டூவீலர் இன்சூரன்ஸ் மற்றும் கார் இன்சூரன்ஸ் ஆன்லைனில் புதுப்பிப்பது எப்படி

Contents

இரு சக்கர வாகன காப்பீடு ஆன்லைன்

இரு சக்கர வாகன காப்பீடு மற்றும் கார் இன்சூரன்ஸ் ஆன்லைனில் குறைந்த விலையில் இரண்டு நிமிடங்களில் CoverNest வெப்சைட்டில் புதுப்பிப்பது எப்படி என்பதை இந்த பதிவில் தெளிவாக பார்க்கலாம்.

இன்று எல்லாமே ஆன்லைன் ஆகிவிட்டது. அதில் வாகன காப்பீடும் அடங்கும். எங்கும் அலையாமல் இருக்கும் இடத்திலிருந்தே உங்கள் வாகனத்திற்கு இன்சூரன்ஸ் புதுப்பிக்கும் வசதி இருப்பதால் நீங்கள் எங்கு இருந்தாலும் வாகனத்திற்கான காப்பீட்டை புதுப்பித்துக் கொள்ள முடியும்.

ஒரு சில நபர்கள் ஆன்லைனில் புதுப்பிக்கும் வாகன இன்சுரன்ஸ் காவல்துறையினரால் ஏற்றுக்கொள்ளப்படுமா? காப்பீட்டுத் தொகை கோரிக்கை விண்ணப்பிக்க முடியுமா என்றெல்லாம் சந்தேகிக்கிறார்கள்.

யுனைட்டட் இந்தியா, தி ஓரியண்டல் இன்சூரன்ஸ் கம்பெனி, நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் கம்பெனி, இப்ஃப்கோ டோகியோ ஜெனரல் இன்சுரன்ஸ், பஜாஜ் இன்சூரன்ஸ் போன்ற நிறுவனங்களில் நாம் நேரடியாக சென்று எப்படி வாகன காப்பீட்டை புதுப்பிப்போமோ அதை நாம் இருக்கும் இடத்திலிருந்தே ஆன்லைனில் செய்கிறோம். மற்றபடி இதில் சந்தேக படுவதற்கு ஒன்றும் இல்லை. முற்றிலுமாக ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒன்றுதான்.

CoverNest Insurance

இரு சக்கர வாகன காப்பீடு - டூவீலர் இன்சூரன்ஸ் மற்றும் கார் இன்சூரன்ஸ் ஆன்லைனில் புதுப்பிப்பது எப்படி

உங்கள் இரு சக்கர வாகன காப்பீடு, கார் மற்றும் கமர்சியல் வாகனங்கள் அனைத்திற்கும் இந்த இணையதளத்தில் காப்பீட்டை புதுப்பித்துக்கொள்ள முடியும். உங்கள் வாகனத்தின் காப்பீடு காலாவதி ஆகி இருந்தாலும், அல்லது காலாவதி ஆக நாற்பது நாட்களுக்குள் இருந்தாலும் நீங்கள் ஆன்லைனில் புதுப்பித்துக்கொள்ள முடியும்.

உங்கள் வாகனத்தின் இன்சூரன்ஸ் புதுப்பித்துக்கொள்ள விண்ணப்பிக்கும் முன் பழைய காப்பீட்டை கையில் வைத்துக் கொள்ளுங்கள்.

வாகன இன்சூரன்ஸ் ஆன்லைனில் புதுப்பிக்கும் முறை

கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து இந்த பக்கத்திற்கு வந்து கொள்ளுங்கள்.

https://covernest.com/

இங்கே நீங்கள் எந்த வாகனத்திற்கு இன்சூரன்ஸ் ரினிவல் செய்ய வேண்டுமோ அதைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள். எடுத்துக்காட்டிற்கு இரு சக்கர வாகன காப்பீடு புதுப்பிக்க டூ வீலர் என்பதை தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம்.

அடுத்ததாக உங்கள் வாகனத்தின் பதிவு எண்ணை டைப் செய்து View Details என்பதை கிளிக் செய்யுங்கள்.

அடுத்த பக்கத்தில் உங்கள் வாகனம் எந்த கம்பெனி, என்ன மாடல், இதற்கு முன்பு காப்பீடு விண்ணப்ப தொகை கோரி உள்ளீர்களா, எந்த வருடம் தயாரிக்கப்பட்டது போன்ற விவரங்கள் தானாகவே வந்துவிடும்.

ஒருவேளை தானாக வரவில்லை என்றால் நீங்கள் டைப் செய்து கொள்ளுங்கள். பின்னர் Get Quotes என்பதை கிளிக் செய்து கொள்ளுங்கள்.

இரு சக்கர வாகன காப்பீடு - டூவீலர் இன்சூரன்ஸ் மற்றும் கார் இன்சூரன்ஸ் ஆன்லைனில் புதுப்பிப்பது எப்படி

பின்னர் வரும் பக்கத்தில் பல இன்சூரன்ஸ் கம்பெனிகளிலிருந்து உங்கள் வாகனத்திற்கான இன்சூரன்ஸ் தொகை வரிசையாக இருக்கும்.

மேலே இந்த இடத்தில் IDV என்ற ஆப்ஷனில்உங்கள் வாகனத்தின் மதிப்பை மாற்றிக்கொள்ள முடியும்.

அதற்கு பக்கத்தில் உள்ள ஆப்ஷனில் Comprehensive அல்லது Third party only என்ற வசதிகளை தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம்.

அதற்கு அருகில் Add Ons என்ற ஆப்ஷனில் Personal Accident Cover, Driver cover, Passenger cover போன்ற விவரங்கள் இருக்கும். உங்களிடம் Personal accident Cover இல்லையென்றால் இதில் தேர்ந்தெடுத்து பின்னர் Update என்பதை கிளிக் செய்தால் அதற்கான தொகையும் சேர்த்து வரும்.

எந்த இன்சூரன்ஸ் கம்பெனியில் உங்கள் வாகனத்திற்கு காப்பீட்டை புதுப்பிக்க விரும்புகிறீர்களோ அதற்கு அருகிலுள்ள Buy Now என்பதை கிளிக் செய்யுங்கள்.

இரு சக்கர வாகன காப்பீடு - டூவீலர் இன்சூரன்ஸ் மற்றும் கார் இன்சூரன்ஸ் ஆன்லைனில் புதுப்பிப்பது எப்படி

பாலிசிதாரர் விவரங்கள்

அடுத்து வரும் இந்த பக்கத்தில் உங்களது பெயர், பாலினம், முகவரி, மொபைல் எண், ஈமெயில் ஐடி போன்ற விவரங்களை டைப் செய்து கொள்ளுங்கள்.

மொபைல் எண்ணையும், இமெயில் ஐடி -யும் மிகச்சரியாக கொடுங்கள். ஏனென்றால் நீங்கள் புதுப்பிக்க போகும் வாகன காப்பீடு உங்கள் ஈமெயில் முகவரிக்குத்தான் வரும்.

பாலிசிதாரரின் வாரிசு விவரங்கள்

பின்னர் இந்த காப்பீட்டிற்கான உங்களின் வாரிசுதாரர் பெயர், அவரின் வயது விவரங்களை சரியாக பதிவு செய்யுங்கள்.

வாகனத்தின் விவரங்கள்

வாகனத்தின் என்ஜின் எண், Chasis எண், பதிவு தேதி, கலர் போன்ற விவரங்களை பதிவு செய்யுங்கள். இந்த விவரங்கள் பழைய பாலிசி மற்றும் ஆர்சி புக் ஆகியவற்றில் இருக்கும்.

இரு சக்கர வாகன காப்பீடு - டூவீலர் இன்சூரன்ஸ் மற்றும் கார் இன்சூரன்ஸ் ஆன்லைனில் புதுப்பிப்பது எப்படி

முந்தைய பாலிசி விவரங்கள்

இவற்றில் முந்தைய பாலிசி எந்த கம்பெனியில் எடுத்துள்ளீர்கள், எப்பொழுது காப்பீடு முடிகிறது, காப்பீடு எந்த வகை அதாவது Comprehensive or Third party only, வாகனத்தின் பெயரில் கடன் ஏதும் உள்ளதா? போன்ற விவரங்களை பதிவு செய்துவிட்டு Next என்பதை கிளிக் செய்யுங்கள்.

அடுத்ததாக Policy Summary என்ற சிறிய பக்கம் திறக்கும். இதில் நீங்கள் பதிவு செய்த விவரங்கள், உங்கள் வாகன விவரங்கள், எந்த மாதிரி காப்பீடு தேர்ந்தெடுத்து உள்ளீர்கள், நோ கிளைம் போனஸ் போன்ற அனைத்து விவரங்களும் இருக்கும். ஒரு முறை முழுவதுமாக கவனித்து பார்த்துவிட்டு Confirm என்பதை கிளிக் செய்து கொள்ளுங்கள்.

பணம் செலுத்தும் முறை

அடுத்ததாக வரும் பக்கத்தில் உங்கள் காப்பீட்டிற்கான தொகை வரியுடன் தோன்றும் உறுதி செய்துவிட்டு Pay Premium என்பதை தேர்ந்தெடுங்கள்.

இரு சக்கர வாகன காப்பீடு - டூவீலர் இன்சூரன்ஸ் மற்றும் கார் இன்சூரன்ஸ் ஆன்லைனில் புதுப்பிப்பது எப்படி

கடைசியாக பணம் செலுத்தும் பக்கத்திற்கு செல்லும். இங்கே கிரெடிட் கார்ட், டெபிட் கார்ட், நெட் பேங்கிங், யு பி ஐ, வேலட் போன்ற எந்த வசதியைப் பயன்படுத்தியும் நீங்கள் பணம் செலுத்தி கொள்ளலாம்.

வாகன காப்பீடு

பின்னர் நீங்கள் கொடுத்த ஈமெயில் முகவரிக்கு உங்கள் இரு சக்கர வாகன காப்பீடு புதுப்பிக்கப்பட்டு அனுப்பி வைக்கப்படும். அதை நீங்கள் பிரின்ட் அவுட் எடுத்து வைத்துக்கொள்ளலாம்.

இரு சக்கர வாகன காப்பீடு - டூவீலர் இன்சூரன்ஸ் மற்றும் கார் இன்சூரன்ஸ் ஆன்லைனில் புதுப்பிப்பது எப்படி

மிக எளிதாக இருந்த இடத்திலிருந்தே இரண்டு நிமிடங்களில் மொபைலில் இருந்தும்கூட உங்களின் இரு சக்கர வாகன காப்பீடு மற்றும் நான்கு சக்கர வாகனங்களின் இன்சூரன்ஸ் பாலிசிகளை ஆன்லைனிலேயே இந்த CoverNest இணையதளத்தில் மிக குறைந்த விலையில் புதுப்பித்துக் கொள்ளலாம். முயற்சி செய்து பாருங்கள்.

அனைவருக்கும் பயன்பட கீழே உள்ள சமூக வலைதளங்களில் நன்றி.