ராகு கேது பெயர்ச்சி 2019 தனுசு

ராகு கேது பெயர்ச்சி 2019 தனுசு

February 13, 2019 0 By Do SoMeThInG nEw

ராகு கேது பெயர்ச்சி தனுசு பலன்கள்

யாருக்கு பலன்கள் நடக்கும் யாருக்கு பலன்கள் நடக்காது

ராகு கேது பெயர்ச்சி தனுசு 2019

ராகு கேது பெயர்ச்சி தனுசு ராசிக்கு அஷ்டமத்தில் ராகுவும், வாக்குஸ்தானத்தில் கேதுவும் இருந்து வந்தார்கள்.

உங்களுக்கு சொல்ல வொண்ணா இன்னல்களை தந்த ராகு கேதுக்கள் இன்னும் சில வாரங்களில் மார்ச் மாதம் 7ல் நடக்கவிருக்கும் ராகு-கேது பெயர்ச்சியின் மூலம் ஏழில் ராகுவும், ராசியில் கேதுவும் மாற போகிறார்கள். இது முன்னர்ஏற்பட்ட காயத்திற்கு மருந்து போடும் காலமாகும்.

ஏழரைச்சனி உங்களை வாட்டி வதைத்து கொண்டிருக்கும் இந்த வேலையில் நடக்கும் ராகு கேது பெயர்ச்சி, உங்களை இன்னும் எச்சரிக்கையாக இருக்க கற்றுக்கொடுக்க போகிறது.

ராகு இருப்பது 8ல் (கடகம்) – வரவிருப்பது 7ல் (மிதுனம்)

கேது இருப்பது 2ல் (மகரம்) – வரவிருப்பது 1ல் (தனுசு)

சப்தம (ஏழாமிட)ராகு

தனுசு ராசிக்கு பாதக இடமான ஏழில் ராகு சஞ்சரிக்கும் இந்த காலம், மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டிய காலமாகும்.

ஏனெனில், இம்முறை ராகு அமர போவது புதனின் வீட்டில், சொந்தமாக வீடுஇல்லாத ராகு கேதுக்கள், தான் அமரும் இடத்தின் அதிபதியின் தன்மையோடு தனது பலத்தை வெளிப்படுத்தி கொள்வார்கள் என்பது விதி.

அதன்படி, புதனின் சேட்டைகளோடு களம் இறங்குவதால், கலகலவென நகரும்காலத்தில் அதிக கவனம் தேவைப்படும். எச்சரிக்கை.

ஒன்றாமிடகேது

கேதுபகவான்1-மிடத்திற்கு மாறுவதால்,தனுசு ராசியினருக்குஒன்றாமிட அதிபதி குரு என்பதாலும், குருபகவான் முழுசுப கிரகம் என்பதாலும்.

ராகு கேதுக்கள் எப்போதும் தான் நிற்கும் வீட்டின் அதிபதியை போன்ற பலனை ஜாதகருக்கு தரும் என்பதால், கேதுவின் பலன்கள் இம்முறை குருவின் தன்மைகளோடு வெளிபடும். ஆன்மீகத்தில் நாட்டமும், கடன்களை சுமக்கும் வகையிலும் கேது செயல்பட உள்ளார்.

ராகு கேது பெயர்ச்சி தனுசு ராசிக்கான பலன்கள்

தொழில் வியாபாரம் வேலை மற்றும் இருப்பிடங்களில் இடமாற்றம் ஏற்படும்.வெளிநாட்டுத் தொடர்புகள் வலுப்பெறும்.

உங்களில் சிலர் வெளிநாட்டுப் பயணம்செய்வீர்கள். வெளிநாட்டு வேலைக்கு முயற்சி செய்தவர்களுக்கு தற்போது வேலைகிடைக்கும்.

கடின முயற்சி தேவைப்படும்

கடும் முயற்சிக்குப் பின்னர்தான் எதையும் செய்ய முடியும். சிலர் தவறானமுடிவுகள் எடுக்க வாய்ப்பு இருக்கிறது. எனவே எந்த ஒரு விஷயத்தையும்ஒன்றுக்கு இரண்டு முறை யோசித்தும், வீட்டில் இருக்கும் அனுபவம் வாய்ந்தபெரியவர்களிடம் ஆலோசித்தும் முடிவு எடுப்பது மிகவும் நன்மையைத் தரும்.

அடிக்கடி ஞாபகமறதி வரும். எனவே கைப்பொருளை எப்போதும் பாதுகாப்பாகவைத்துக் கொள்ளுவது நல்லது. வங்கியிலிருந்து பணம் எடுக்கும் போதோ அல்லதுபெரிய தொகைகளை கையாளும்போதோ மிகவும் கவனமாக இருக்கவேண்டியது அவசியம்.

கடன்கள்

புதிய கடன்கள் வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது. எக்காரணத்தைக் கொண்டும்அதிக வட்டிக்கு வாங்குவதை தவிர்ப்பது நல்லது. அரசு தனியார்துறை பணியாளர்கள்அதிகாரிகளை பகைத்துக் கொள்ள வேண்டாம். அலுவலகங்களில் உங்களைப்பிடிக்காதவர்கள் கை ஓங்கும் சூழ்நிலை வரலாம் உடன் வேலை செய்பவர்களிடம் வீண்அரட்டை, மேல் அதிகாரியின் செயல் பற்றிய விமரிசனங்கள் போன்ற விஷயங்களைதவிருங்கள்.

அதிர்ஷ்டம் கை கொடுக்காத நேரம் இது. உழைப்பும் முயற்சியும் மட்டுமேவெற்றியைத் தரும். செலவுகளை சுருக்க வேண்டியது அவசியம். வீண்செலவுகள் செய்யாதீர்கள். எவருக்கும் உதவி செய்வதாக வாக்கு கொடுத்தால் அதைநிறைவேற்றுவது கடினமாக இருக்கும்.

வேலை, தொழில்

பன்னாட்டு நிறுவனங்கள், தொழிற்சாலைகளில் வேலை செய்பவர்களுக்கு துறைசார்ந்த நெருக்கடிகள் இருக்கும். மேலதிகாரிகளிடம் சற்றுத் தள்ளியே இருங்கள். செய்யாத தவறுக்கு வீண்பழி வருவதற்கு வாய்ப்பிருக்கிறது.

தலைமைப்பொறுப்பில் இருப்பவர்கள் தங்களின் கீழ் வேலை செய்பவர்களை நம்ப வேண்டாம்.நம்பிக்கைத் துரோகம் உங்களுக்கு நடக்க வாய்ப்பிருக்கிறது. அரசாங்க உதவிகள்கிடைப்பதற்கு தடைகள் உண்டு. எதையும் நேர்வழியில் சென்று சாதிப்பதே நல்லது.குறுக்குவழியில் செல்லாதீர்கள். சிக்கல்கள் வரும்.

வேலையில் இருக்கும் இளைய பருவத்தினருக்கு வேலை மாற்றம், வெளியூர்மாற்றம், மாற்றத்தினால் உண்டாகும் பதவி உயர்வு போன்றவைகள் உண்டாகும்.தொழில் அதிபர்கள், கலைஞர்கள் போன்றவர்களுக்கு மாற்றங்களுடன் கூடியநல்லவிதமான திருப்பங்கள் இருக்கும்.

வியாபாரிகளுக்கு வியாபாரம் குறையும் என்றாலும், லாபம் அதிகம் இருக்கும்என்பதால் குறை சொல்ல எதுவும் இல்லை. வருமானத்தில் எந்தவித குறைவும்இருக்காது. சொந்தத்தொழில் செய்பவர்கள் தங்களுடைய தொழில் விரிவாக்கத்தினைசற்றுக் கவனமுடன் செயல்படுத்துவது நல்லது.

அரசு தனியார்துறை பணியாளர்கள் அதிகாரிகளை பகைத்துக் கொள்ள வேண்டாம்.அவர்கள் சொல்வதை கேட்டு நடந்து கொள்வது நல்லது. அலுவலகங்களில் உங்களைப்பிடிக்காதவர்கள் கை ஓங்கும் சூழ்நிலை வரலாம்.

குழந்தைகள், கல்வி,

பள்ளிகல்லூரி செல்லும் வயதில் பிள்ளைகளை வைத்திருப்பவர்கள் குழந்தைகளின் மேல்சற்றுக் கவனம் செலுத்த வேண்டிய நேரம் இது.

பிள்ளைகளின் கவனம்படிப்பிலிருந்து விலகி காதல், கத்திரிக்காய் என்று வேறு பக்கம்திரும்புவதற்கு வாய்ப்பிருக்கிறது.

வேறு ஏதாவது வம்புகளில் சிக்கி உங்களைமனக்கஷ்டத்திற்கு ஆளாக்குவார்கள் என்பதால் அவர்களை கண்காணிப்பது நல்லது.பிள்ளைகள் உங்கள் பேச்சைக் கேட்கவில்லை என்றால் கோபப்பட வேண்டம். நொந்துகொள்ள வேண்டாம்.

வீட்டில் குழந்தைகளில் உடல் நலத்தில் அக்கறையும், கவனமும் தேவைப்படும்.சிறு குழந்தைகளுக்கு சாதாரண உடல்நலக் குறைவு என்றால் கூட அலட்சியமாகஇருக்காமல் உடனடியாக மருத்துவரிடம் சிகிச்சைக்கு செல்வது நல்லது.

மாணவர்கள்படிப்பில் கவனமாக இருங்கள். அரியர்ஸ் வரும் வாய்ப்பு இருக்கிறது.காலேஜிற்கு கட் அடிக்காதீர்கள்.

காலேஜ் உங்களைக் கட் அடித்து விடலாம்.இளைஞர்களும், யுவதிகளும் தங்களின் வாழ்க்கைத் துணைவரை பார்க்கும்வாய்ப்புக் கிடைக்கலாம். காதல் வரும் வருடம் இது.

குடும்பம், உழைப்பு, ஆன்மிகம்

ஜன்ம ராசியில் கேது அமர்வதால் தள்ளிப் போயிருந்த நேர்த்திக்கடன்களைஇப்போது நிறைவேற்ற முடியும். குடும்பத்துடன் குலதெய்வ வழிபாடு செய்வீர்கள்.

சிலர் புனிதத்தலங்களுக்கு அருகில் வேலை மாறுதல்கள் பெறுவீர்கள். சிதிலம்அடைந்த ஆலயங்களை புனருத்தானம் செய்வீர்கள். கும்பாபிஷேக திருப்பணிகளில்கலந்து கொள்ளும் பாக்கியம் கிடைக்கும்.

முதல் திருமண வாழ்க்கை முறிந்து இரண்டாம் திருமணத்திலாவது நிம்மதிஇருக்குமா என்று பயந்து கொண்டிருப்பவர்களுக்கு இப்போது திருமண அமைப்புஉண்டாகும். அந்த இரண்டாவது வாழ்க்கை நன்றாகவும் நிம்மதியாகவும் இருக்கும்.

தந்தைவழி உறவினர்களிடம் நெருக்கம் உண்டாகும். இதுவரை இருந்துவந்தபங்காளிப் பிரச்னை தீரும். பூர்வீக சொத்துக்களில் உங்கள் பாகம்சேதமில்லாமல் உங்களுக்கு கிடைக்கும்.

பெரியப்பா சித்தப்பாக்கள் மற்றும்தந்தையுடன் பிறந்த அத்தைகளால் லாபம் இருக்கும். தந்தையிடமிருந்து ஏதேனும்ஆதாயம் இருக்கும். இளைஞர்களுக்கு நீங்கள் விரும்பிக் கேட்கும் ஒரு பொருளைஉங்கள் அப்பா வாங்கித் தருவார்.

எந்தஒரு முடிவு எடுக்கும் முன்னரும் வீட்டில் இருக்கும் பெரியவர்களிடமோ உங்கள்மேல் அக்கறை கொண்ட நண்பர்கள் உறவினர்களிடமோ கலந்து பேசி அவர்களின்ஆலோசனையை ஏற்று செயல்படுவது நல்லது.

வேலை மாற்றம், வீடுமாறுதல், அலுவலகம் மாறுதல், வெளியூருக்கு டிரான்ஸ்பர்ஆகுதல் போன்றவைகள் நடந்து கணவர் ஓரிடம் நீங்கள் ஓரிடம் என்று அலைச்சல்கள்இருக்கக்கூடிய வாய்ப்பு இருக்கிறது.

உங்களின் உழைப்பும் முயற்சியும்மட்டுமே உங்களுக்கு வெற்றியைத் தரும் என்பதால் உண்மையாக கடுமையாக உழைத்தால்மட்டுமே இப்போது வெற்றி கிடைக்கும்.

குறிப்பிட்டசிலருக்கு ஆலயப்பணி செய்யும் பாக்கியம் கிடைக்கும். நீண்ட நாட்களாக போகமுடியாமல் தள்ளிப் போயிருந்த தீர்த்த யாத்திரை இப்போது போக முடியும்.

காசிகயா பத்ரிநாத் கேதார்நாத் போற வடமாநில புண்ணியத்தலங்களை தரிசிக்கும்வாய்ப்பு இப்போது கிடைக்கும். ஞானிகளின் தரிசனம் கிடைக்கும். மகாபெரியவரின்அதிஷ்டானம் போன்ற மிகப்பெரும் புனித இடங்களை வழிபடும் பாக்கியம்உண்டாகும்.

பணவரவு

பணவரவும் பொருளாதார நிலைமையும் நன்றாகவே இருக்கும். எனவே நிதிநிலைமையைப்பற்றி கவலைப்பட வேண்டியது இருக்காது.

ஆனாலும் வீண் செலவு செய்வதைதவிருங்கள். என்னதான் பணவரவு நிறைவாக இருந்தாலும் பற்றாக்குறையை விரயகேதுஏற்படுத்துவார் என்பதால் எல்லாவற்றிலும் சிக்கனமாக இருப்பது நல்லது.

ரேஸ் லாட்டரி பங்குச்சந்தை சூதாட்டம் போன்றவைகள் இப்போது கை கொடுக்காது.சிறிது லாபம் வருவது போல் ஆசைகாட்டி பிறகு மொத்தமாக இருப்பதையும் இழக்கவைக்கும் என்பதால் மேற்கண்ட இனங்களில் கவனமுடன் இருக்கவும்.

வேலை இல்லாமல் அலைந்து கொண்டிருக்கும் அன்பர்கள்,  தற்சமயம் எந்த வேலை கிடைத்தாலும் சரி, அதை பெரிய வாய்ப்பாக கருதி, அந்த வேலையில் சேர்ந்துகொள்ளுங்கள்.

ஏனெனில், இந்த சமயங்களில் வேலை கிடைப்பதே குதிரைகொம்பு போலத்தான். ஆதலால், வரும் வாய்ப்பை உங்கள் தகுதி மற்றும் விருப்பத்திற்கு ஏற்றவாறு இல்லை என்று சொல்லி தட்டி கழிக்க வேண்டாம்.

பங்குச்சந்தை சூதாட்டம் போன்றவைகள் இப்போது கை கொடுக்காது.சிறிது லாபம் வருவது போல் ஆசைகாட்டி பிறகு மொத்தமாக இருப்பதையும் இழக்கவைக்கும் என்பதால் மேற்கண்ட இனங்களில் கவனமுடன் இருக்கவும்

வயதான தனுசு ராசிக்கார்கள் சிலருக்கு வெளிநாட்டில் இருக்கும் பேரன், பேத்திகளை பார்ப்பதற்கு வாய்ப்பு கிடைக்கும். ஒரு சிலர் மகன், மகள்களுக்குஉதவி செய்ய வெளிநாட்டுப் பயணம் மேற்கொள்வீர்கள்.

பெண்களுக்கான விசேஷ பலன்கள்

பெண்களுக்கு இந்தப்பெயர்ச்சி நல்ல பலன்களைத்தான் தரும். அதே நேரத்தில்பணி புரியும் இடங்களில் யாரையும் நம்பி எதையும் செய்ய வேண்டாம். குறிப்பாகஅரசுத் துறையில் இருப்பவர்களுக்கு பணிச்சுமை அதிகம் இருக்கும் என்பதால்அனைத்திலும் முன்னெச்சரிக்கையோடு இருப்பது நல்லது.

ராகு கேது பெயர்ச்சி தனுசு ராசிக்கான சிறப்பு பலன்கள்

(குருபெயர்ச்சி – சனிபெயர்ச்சி)

ராகு-கேது பெயர்ச்சியை தொடர்ந்து எட்டு மாதங்களில் குருபெயர்ச்சியும், குருபெயர்ச்சியை தொடர்ந்து இரண்டு மாதங்களில் சனிபகவான் பெயர்ச்சியும் நடக்க உள்ளதால், இந்த ராகு கேது பெயர்ச்சி, குருபெயர்ச்சி வரை, ஒருவிதமாகவும், குருபெயர்ச்சிக்கு பின் வேறு விதமாகவும், மேலும் சனிபெயர்ச்சிக்கு பின் மற்றொரு கோணத்தில் உங்களுக்கு பலன் அளிக்க உள்ளது என்பதை மனதில் நிறுத்துங்கள்.

ராகு கேது பெயர்ச்சி தனுசு ராசியில் – குருபெயர்ச்சி வரை

(07.03.2019 முதல் 04.11.2019 வரை)

உங்களுக்கு இம்முறை நல்ல பணவரவுகள்இருக்கும். சிலருக்கு மிகையான ஆன்மிக நாட்டம், ஞானிகள் தரிசனம், இதுவரைசெல்லாத திருத்தலங்களை தரிசிக்கும் பாக்கியம், புதிய வாகன யோகம், எதிலும்லாபம், மூத்தசகோதர நன்மை போன்றவைகள் உண்டாகும்.

ஏதேனும் ஒரு வகையில்விரயங்கள் வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது. வேலை மாற்றங்களோ வேலையை விட்டு விலகக்கூடிய சூழ்நிலைகளோ, தூர இடங்களுக்குபணி மாறுதல்கள் கிடைப்பதோ இப்போது இருக்கும் என்பதால் எதையும் நீங்கள்புத்திசாலித்தனமாக சமாளிக்க வேண்டி இருக்கும்.

தந்தைவழியில் ஆதரவுகுறையும். அதேநேரத்தில் உங்களின் ஆன்ம பலம் கூடும். மிகவும் நம்பிக்கையாகஇருக்க முடியும். ஏதேனும் ஒரு பொறுப்பு கிடைக்கும். மற்றவர்களை வழிநடத்துவீர்கள். இனி எல்லாம் நல்லபடியாக நடக்கப் போகிறது.

ராகு கேது பெயர்ச்சி தனுசு ராசியில் – குருபெயர்ச்சி பின்

(04.11.2019 முதல் 24.01.2020வரை)

ஜென்ம குருவாக குரு வருவது சற்று உங்களின் வேகத்தை மட்டுபடுத்தும் அமைப்பு ஆகும். ஆனாலும் இந்த காலம் மிக சிறந்த பொருளாதார நன்மைகளை நிச்சயம்உங்களுக்கு தரும்.

குருபகவானும் வலுவாக உள்ளதால் மனதில் ஆன்மிக எண்ணங்கள்மேலோங்கும். சித்தர்களின் ஆசிகள் எப்போதுமே உங்களுக்கு உண்டு. சிறப்பு நற்பலன்களும் நல்ல லாபங்களும் இப்போது உண்டு.

சந்திரன் இரண்டேகால்நாட்களுக்கு ஒருமுறை ராசி மாறுவார் என்பதால் அவர் வலுவாக இயங்கும்நாட்களிலும், கேதுவுடன் இணையும் நேரங்களிலும் மிகுந்த நன்மைகளை இப்போதுபெறுவீர்கள்.

எல்லாவற்றிற்கும் அடுத்தவர்களை எதிர்பார்த்திருந்த நிலைமைமாறி நீங்கள் மற்றவர்களுக்கு உதவுவீர்கள். கோவில் திருப்பணிகளில் ஆர்வம்காட்டுவீர்கள். ஞானிகளின் திருத்தலங்களுக்கு பயணம் செல்வீர்கள்.மகாபெரியவரின் அதிஷ்டானத்திற்கு சென்று அவரின் அருளைப் பெறும் பெரியபாக்கியம் கிடைக்கும்.

அதிகாரமான பதவியில் இருப்போருக்கு அவர்களின் அஸ்திவாரமே கதிகலங்கும் காலமும் கூட. ஏனெனில், உயர் அதிகாரிகளாக இருப்பவர்கள், உங்களின் அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்யாத வரை (இதற்கு முன்பும் செய்யாமல் இருந்திருக்க வேண்டும்) உங்களின் செல்வாக்கு நிச்சயம் எந்த விதத்திலும் பாதிப்பும் அடையாது.

மாறாக அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி இருந்தால் அதன் பாதிப்பு நிச்சயம் உங்களை ஆட்டி படைக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

ராகு கேது பெயர்ச்சி தனுசு ராசியில் – சனிபெயர்ச்சிக்கு பின்

(24.01.2020 முதல் 23.09.2020 வரை)

ஜென்ம சனி விலகுவதால் சற்று இளைப்பாற நேரம் கிடைக்கும் காலம் இது. கடன்கள் கட்டுக்குள் இருக்கும். சிலர்புதிய கடன்களை வாங்கி பழைய கடன்களை அடைப்பீர்கள். சிலருக்கு அலைச்சல்களும்மந்தநிலையும் ஒருபுறம் இருந்தாலும் இன்னொரு புறம் தொழில் முன்னேற்றமும்வருமானமும் கண்டிப்பாக இருக்கும். கோர்ட், கேஸ், நிலம் சம்பந்தமானவழக்குகள்.

போலீஸ் விவகாரங்கள் கிரிமினல் வழக்குகள் உள்ளவர்களுக்கு சாதகமானதிருப்பங்கள் இருக்கும். கவனத்துடன்செயல்படாவிடில், கடன்கள் அதிகமாகும் காலகட்டம். குடும்பத்தில்சிறுசிறு பிரச்னைகள் வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது. அனைத்துவிஷயங்களையும் மனைவியின் பொறுப்பில் விட்டுவிடுவதன் மூலம் சிக்கல்கள்எதுவும் வராமல் தப்பிக்கலாம்.

ராகு கேது பெயர்ச்சி தனுசு ராசியில் பாதிப்பு யாருக்கு இருக்கும் –யாருக்கு இருக்காது

பாதிப்பு குறைய என்ன பரிகாரம்

சொல்லப்படும் பலன்கள் யாவும் துல்லியமாக அனைவருக்கும் சர்வநிச்சயமாக நடந்துவிடாது. அதற்கு அவரவர் சுய ஜாதகத்தில் நடக்கும் தசாபுத்தி அமைப்பு முக்கியமான காரணமாக சொல்லப்பட்டாலும், பலன்கள் நடக்கும் அமைப்பை அதன் அளவை மற்றொரு முறையிலும் கண்டறிய இயலும். அதை பற்றி தெரிந்து கொண்டு அதற்கு உண்டான இறைவழிபாடுமற்றும் பரிகார முறைகளையும் தெரிந்துகொள்ள பின்வரும் வீடியோவை பாருங்கள்.

ராகு கேது பெயர்ச்சி தனுசு ராசிக்கான பலன்கள் 2019-2020 யாருக்கு நடக்கும் நடக்காது

************************************

மேலும் ஜோதிடம் குறித்த குறிப்புகள் மற்றும் நுணுக்கமாக விசயங்கள் அறிந்துகொள்ள எமதுYouTubeசேனலானSHRI JAI SAKTHI JOTHIDAM – ஐSubscribeசெய்வதுடன் அருகில் வரும்Bell – ஐயும்Clickசெய்து கொள்ளுங்கள்.

https://www.youtube.com/c/SHRIJAISAKTHIJOTHIDAM

மேலும் சுய ஜாதக சந்தேகங்களுக்கு (கட்டண சேவை)

ஸ்ரீ ஜெய் சக்தி ஜோதிடம், திருச்சி,

(ஜோதிட ஆராய்ச்சி நிலையம்)

எளிய பரிகார ஜோதிடர், ஜோதிட ஆச்சார்யா, பிரசன்ன ரத்னா

M.M.CHANDRA SEGARAN,

(M.M.சந்திரசேகரன்)

ஆலோசனை கட்டணம் குறித்த விபரமறிய உங்களின் ஜாதகத்தை

70102-92553 அல்லது 89730-66642 என்ற எண்ணிற்க்கு வாட்சப் அனுப்பவும்

*********************************

எம்மை வழிநடத்தும் இறைகுருவுக்கும், எம்முடைய ஜோதிட ஆசான்

குருஜி உயர்திரு ஜி.கே. அய்யா (திருப்பூர்) அவர்களுக்கும், எமது மானசீககுரு

உயர்திரு ஆதித்யகுருஜி (சென்னை) அவர்களுக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்

*********************************