ராகு கேது பெயர்ச்சி 2019 சிம்மம்

0
2621
ராகு கேது பெயர்ச்சி 2019, ராகு கேது பெயர்ச்சி, ராகு கேது பெயர்ச்சி 2019 தேதி, ராகு கேது பெயர்ச்சி எப்போது, ராகு கேது பரிகாரம், குரு கேது பெயர்ச்சி 2019 சிம்மம், ராகு கேது பெயர்ச்சி சிம்மம் 2019, சிம்மம் ராசி ராகு கேது பெயர்ச்சி, சிம்மம் ராசி ராகு கேது பெயர்ச்சி 2019, ராகு கேது பெயர்ச்சி சிம்மம் ராசி, சிம்ம ராசி ராகு கேது பெயர்ச்சி, சிம்ம ராசி ராகு கேது பெயர்ச்சி 2019, ராகு கேது பெயர்ச்சி 2019 to 2020, ராகு கேது பெயர்ச்சி 2019 to 2020 சிம்மம், சிம்ம ராசி ராகு கேது பெயர்ச்சி 2019 to 2020, சிம்மம் ராசி ராகு கேது பெயர்ச்சி 2019 to 2020, ராகு கேது பெயர்ச்சி பலன்கள், ராகு கேது பெயர்ச்சி தோசம் நீங்க, ராகு கேது தோஷம் நீங்க, ராகு கேது 2019, ராகு கேது பெயர்ச்சி 2019 to 2020, ராகு கேது பெயர்ச்சி 2019 பரிகாரம், ராகு கேது பெயர்ச்சி 2019 எளிய பரிகாரம், ராகு கேது பெயர்ச்சி 2019 சிம்மம் பரிகாரம், சிம்ம ராசி ராகு கேது பெயர்ச்சி 2019 பரிகாரம், சிம்மம் ராசி ராகு கேது பெயர்ச்சி 2019 பரிகாரம், 2019 to 2020 ராகு கேது பெயர்ச்சி, 2019 to 2020 ராகு கேது பெயர்ச்சி சிம்மம், 2019 to 2020 ராகு கேது பெயர்ச்சி சிம்ம ராசி, 2019 to 2020 சிம்மம் ராசி ராகு கேது பெயர்ச்சி, 2019 to 2020 சிம்ம ராசி ராகு கேது பெயர்ச்சி, simmam rasi, simmam rasi ragu kethu peyarchi, simmam rasi ragu kethu peyarchi 2019, simma rasi ragu kethu peyarchi 2019, ragu kethu peyarchi 2019 to 2020, ragu kethu peyarchi 2019 to 2020 simmam, ragu kethu peyarchi 2019 to 2020 simma rasi, LEO rahu ketu transit, LEO rahu ketu transit 2019, LEO rahu ketu transit 2019 to 2020, LEO, LEO horoscope 2019,

Contents

ராகு கேது பெயர்ச்சி சிம்மம் பலன்கள்

யாருக்கு பலன்கள் நடக்கும் யாருக்கு பலன்கள் நடக்காது

ராகு கேது பெயர்ச்சி சிம்மம் 2019

ராகு கேது பெயர்ச்சி சிம்மம் ராசிக்காரர்களுக்கு 6 மற்றும் 12-ம்இடங்களில் இருந்து வந்த காலத்தில் இருந்தீர்கள்.

விரய செலவுகளில் அதிகம் உங்களை தள்ளிவிட்டராகு கேதுக்கள் இன்னும் சில வாரங்களில் மார்ச் மாதம் 7ல் நடக்கவிருக்கும் ராகு கேது பெயர்ச்சி யின் மூலம் 5 மற்றும் 11-ம் இடங்களுக்குமாற இருக்கின்றன.

ராகு இருப்பது 12ல் (கடகம்) – வரவிருப்பது 11ல் (மிதுனம்)

கேது இருப்பது 6ல் (மகரம்) – வரவிருப்பது 5ல் (தனுசு)

பதினோறாமிடராகு

லாபஸ்தானம் என்று சொல்லப்படும் 11-ம் இடம் ஒரு மிக விசேஷமான அமைப்பை கொண்டதாகும்ராகு கேதுக்கள் 11-ம் இடங்களில் வந்து அமரும் போதுநன்மைகளை நிச்சயம் செய்வார் என்பதை மனதில் கொள்ளுங்கள். ஆகையால்அனைத்து தரப்பு சிம்ம ராசிக்காரர்களுக்கும் அவரவர்கள் வயது, இருப்பிடம், தகுதி நிலை போன்றவைகளுக்கு ஏற்ப ராகுவால் நன்மைகள் இருக்கும்.

ஐந்தாமிடகேது

கேதுபகவான்5-மிடத்திற்கு மாறுவதால்,சிம்ம ராசியினருக்கு ஐந்தாமிட அதிபதி குரு என்பதாலும், குருபகவான் முழுசுப கிரகம் என்பதாலும். ராகு கேதுக்கள் எப்போதும் தான் நிற்கும் வீட்டின் அதிபதியை போன்ற பலனை ஜாதகருக்கு தரும் என்பதால், கேதுவின் பலன்கள் இம்முறை குருவின் தன்மைகளோடு வெளிபடும். ஆன்மீகத்தில் நாட்டமும், கடன்களை சுமக்கும் வகையிலும் கேது செயல்பட உள்ளார்.

ராகு கேது பெயர்ச்சி சிம்மம் பலன்கள்

தந்தை வழியில் நல்ல செய்திகள் இருக்கும்.பூர்வீக சொத்து கிடைக்கும். ஒரு சிலர் வெளிநாடு செல்வீர்கள்.

சகோதர வழியில்உதவிகளும் நன்மைகளும் இருக்கும். சகோதர சகோதரிகள் உங்களைப்பாராட்டுவார்கள். உங்களிடம் காரியம் சாதித்து கொள்வார்கள். அவர்களுக்கு உதவமுடியும்.

இதுவரை இருந்து வந்த வீண் செலவுகளும், விரயங்களும் தவிர்க்கப்பட்டு சேமிப்பு கண்டிப்பாக இருக்கும்.

இனிமேல்குறிப்பிடத்தக்க அளவில் பண வரவும், லாபங்களும் இருக்கும் என்பதால் நினைத்தஇடத்தில் நல்ல வகையில் முதலீடு செய்யமுடியும்.

ராகு-கேதுக்கள் 5, 11-ம் இடங்களில்மாறுவதால் வேறு மத, மொழி, இனம் போன்ற நமக்கு சம்பந்தம் இல்லாத அன்னியஅமைப்புகளினாலும், நண்பர்களினாலும் சிம்மத்திற்கு இம்முறை லாபங்கள் இருக்கும்.

பதினொன்றாமிடத்தில் இருக்கும் ராகுபகவானால் உங்களின் ஆன்ம பலம், மனஉறுதி, செயல்திறன், அறிவாற்றல், சொல்வன்மைகூடும் என்பதால் இன்னும் ஒன்றரை வருடங்களுக்கு உங்களது வாக்குறுதியும்சொல்லும் பலித்து உங்களை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தி அந்தஸ்து, கௌரவத்தைஉயரவைக்கும்.

குறிப்பாக பிறந்த ஜாதகத்தின்படி ராகு நல்லஇடங்களில் அமர்ந்த ராகு தசையோ, புக்தியோ நடைபெறுபவர்களுக்கு கூடுதலானநற்பலன்கள் உண்டு. அதேபோல ஜாதகத்தில் ராகுதசை இல்லா விட்டாலும் யோகதசாபுக்திகள் நடைபெறுவர்களுக்கும் இந்த பெயர்ச்சியின் மூலம் மேன்மையானபலன்கள் இருக்கும்.

தனவரவு

பொதுவாகராகு கோட்சாரத்தில் நல்ல இடங்களில் வரும் போது சாதூரியமான விதங்களில் பணவரவை தருவார் என்பதாலும், மறைமுகமான வழிகளில் தன லாபம் தருவர் என்பதாலும், இம்முறை சிம்மம் ராசிக்காரர்களுக்கு எப்படி இந்தப் பணம் வந்தது என்றுவெளியில் சொல்லமுடியாத அளவிற்கு பண வரவுகளை அளிப்பார்.

அதுபோன்ற அமைப்பில் தற்போது ராகு பகவான்சிம்ம ராசிக்கு வர இருப்பதால் இதுவரை தொழில் விஷயத்திலும், பண விஷயத்திலும்முன்னேற்றங்களை அடையாதவர்களுக்கு நல்ல மாற்றங்கள் நடந்து அருமையான பணவரவுகள் இன்னும் இரண்டு வருடங்களுக்கு சிம்ம ராசிக்காரர்களுக்கு அமையும்.

குறிப்பாக எதிர்பாராத அதிர்ஷ்டங்களை இந்தபெயர்ச்சியின் மூலம் சர்ப்பக் கிரகங்கள் தரும். வெகுநாட்களாக இழுத்துக்கொண்டிருந்த விஷயங்கள் திடீரென முடிவடைந்து உங்களுக்கு பண வரவு கிடைக்கும்.மொத்தத்தில் இந்த ராகு-கேது பெயர்ச்சி அபரிமிதமான தன லாபத்தையும், பணவரவுகளையும் உங்களுக்கு தரும் என்பது உறுதி.

வேலை, தொழில், வெளிநாடு

வெளியிடங்களில் மதிப்பு, மரியாதை கௌரவம்நல்லபடியாக இருக்கும். வியாபாரிகளுக்கு கொள்முதல் வியாபாரம் போன்றவைகளில்பிரச்னை எதுவும் இருக்காது.

விவசாயிகளுக்கு இது மிகவும் நல்ல பலனைத்தரும்பெயர்ச்சிதான். விளைந்த பயிருக்கு நியாயமான விலை கிடைக்கும்.

பணப்பயிர்மற்றும் எண்ணை வித்துகள் போன்றவை பயிரிட்டவர்களுக்கு லாபம் வரும்.கலைஞர்கள் பொதுவாழ்வில் உள்ளவர்கள் மாணவர்கள் உள்ளிட்ட சகலருக்கும் நன்மைதரும் பெயர்ச்சி இது

சம்பளம் தவிர்த்த ‘இதர’ வருமானங்கள் வரும்துறைகளில் இருப்பவர்கள் எங்கும் எதிலும் கூடுதல் கவனத்துடன்இருக்கவேண்டியது அவசியம்.

எந்த ஒரு விஷயத்திலும் அலட்சியமாகவோகவனக்குறைவாகவோ இருக்க வேண்டாம். எவ்வளவு நெருங்கியவராக இருந்தாலும்அடுத்தவர்களை நம்ப வேண்டாம்.

பூர்வபுண்ணியஸ்தானம் வலுப்பெறுவதால் இனிமேல் அதிர்ஷ்டம் உங்களுக்குக் கை கொடுக்கும்.பெற்றோர்களுக்கு பிள்ளைகள் மூலம் மனமகிழ்ச்சியான சம்பவங்கள் நடைபெறும்.பிள்ளைகள் மூலம் ஆதரவு உண்டு.

இளையபருவத்தினர்இதுவரை இருந்து வந்த ஏமாற்றத்திலும் மன அழுத்தத்திலும் இருந்துவிடுபடுவீர்கள். ராகுபகவான் யோகத்தை தரப்போவதோடு இதுவரை இருந்து வந்தமனக்குழப்பங்களையும் காரியத் தடைகளையும் துரதிர்ஷ்டங்களையும் விரட்டிஅடிப்பார்.

குடும்பம், சேமிப்பு

மகன் மகள்களால் பெருமைப்படக் கூடியசெய்திகள் இருக்கும். வெளிநாட்டில் வேலை செய்யும் பிள்ளைகளை தற்போதுபார்க்க முடியும். பிள்ளைகள் விரும்பும் பள்ளி, கல்லூரிகளில் அவர்கள்விரும்பும் படிப்பில் சேர்க்க முடியும்.

இதுவரை சேமிக்க முடியாதவர்கள் இந்த முறைகுழந்தைகளின் பெயரில் அவர்களின் எதிர்காலத்திற்காக ஏதேனும் ஒரு வழியில்சேமிப்புகள் செய்ய முடியும்.

இன்னும் வேலை திருமணம் போன்றவைகள்நல்லபடியாக அமைந்து செட்டிலாகாத சிம்மம் ராசி இளைய பருவத்தினருக்குதிறமைக்கேற்ற நல்ல வேலை கிடைக்கும். விரைவில் திருமணம் நிச்சயம் ஆகும்.

எழுச்சி பாதையில்

இதுவரை சிக்கலில் இருந்த தொழில் வியாபாரம்போன்ற அமைப்புகள் மீண்டும் எழுச்சியுடன் நடைபெறும்.

வியாபாரிகளுக்கும்தொழில் அதிபர்களுக்கும் சுயதொழில் செய்பவர்களுக்கும் இந்தப்பெயர்ச்சிமிகவும் கை கொடுக்கும்.

கேதுபகவானின் அருளினால் நீண்ட நாட்களாகதள்ளிப் போயிருந்த குலதெய்வ வழிபாடு சிறப்பாகச் செய்ய முடியும்.

நேர்த்திகடன்கள் செலுத்துவீர்கள். வெகு நாட்களாக திட்டம் போட்டுக்கொண்டிருந்த வடமாநில புனித யாத்திரை இப்போது போக முடியும். ஞானிகள்அருள்புரியும் ஜீவசமாதிகளுக்கு சென்று அவர்களின் அருள் பெற முடியும்.

கடன், வெளிநாடு, பெண்கள்

கடன் பிரச்னைகளிலும் வழக்குவிவகாரங்களிலும் சிக்கித் தவித்து தூக்கத்தை இழந்திருந்தவர்களுக்கு அவைகள்நல்லபடியாக ஒரு முடிவுக்கு வந்து நிம்மதியைத் தரும்.

வீடு கட்டுவதுஇடையிலேயே தடைப்பட்டவர்கள், வீட்டுக் கடன் கிடைக்காமல் இருந்தவர்கள்இனிமேல் அந்த குறை நீங்கப் பெறுவார்கள். பழைய கடனை அடைக்க புதிய கடன்களும் கிடைக்கும்

வெளிமாநில, வெளிதேச பிரயாணங்கள்இருக்கும். அதனால் நன்மைகள் உண்டாகும். திரவப் பொருட்கள், வெள்ளைநிறம்சம்பந்தப்பட்ட தொழில், ஆற்றுமணல், கட்டுமானப்பொருள் தொழில் செய்பவர்களுக்குநல்ல பலன்கள் உண்டு.

பெண்களுக்குவேலை செய்யும் இடங்களில் இதுவரை இருந்துவந்த மனக்கசப்புகள் அனைத்தும்நல்லபடியாகத் தீர்ந்து உங்களுடைய அதிகாரங்களும் மேலாண்மையும் நிலைநாட்டப்படும்.

குடும்பம்

குடும்பத்தில் இதுவரை உங்களுடைய ஆலோசனைகளை ஏற்காமல் தவிர்த்துஅதனால் பிரச்னைகளில் சிக்கித் தவித்தவர்கள் இனிமேல் உங்களின் சொல்லைக்கேட்பார்கள்.

குடும்ப பிரச்சனை காரணமாக பிரிந்திருந்தகணவன் மனைவியர் ஒன்று சேருவீர்கள். விவாகரத்து வரை போன தம்பதிகள் வழக்கைத்திரும்பப் பெற்று சமரசமாகி திரும்ப இணைவீர்கள்.

முதல் வாழ்க்கை கோணலாகிப்போனவர்களுக்கு இரண்டாவது வாழ்க்கை நல்லபடியாக அமையும்.

மறைமுகமானவழிகளில் சிலருக்கு வருமானம் உண்டு. குறிப்பாக ரியல் எஸ்டேட் மற்றும் வீடுகட்டித் தரும் புரமோட்டர்கள் போன்றவர்களுக்கு தொழிலில் நல்ல மாற்றங்கள்இருக்கும். கோபத்தைக் கட்டுப்படுத்துங்கள்.

நிறைய செலவுகளும் விரயங்களும்இருப்பதை கிரகங்கள் காட்டுகின்றன. வருமானத்தை சேமிக்க முயற்சி செய்யுங்கள்.

உங்களில் சிலர் வெளிநாட்டுத் தொடர்பால்நன்மை அடைவீர்கள். வெளிநாடு போகவும் வாய்ப்பு இருக்கிறது. வேற்று மதத்தினர்உங்களுக்கு உதவுவார்கள்.

தந்தைவழி உறவில் மிகவும் நல்ல பலன்கள் இருக்கும்.கணிதம் சாப்ட்வேர் தொடர்பான துறைகளில் இருப்பவர்களுக்கு ஏதேனும் பரிசுஅல்லது விருது கிடைப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது. வேலையில் பாராட்டப்படுவீர்கள்.

நெருங்கிய உறவினர்களை இழந்து மனவேதனையில்வாடியவர்கள் புதிய உறவுகள் ஏற்பட்டு புது மனிதர்களாக பிறவி எடுப்பீர்கள்.

உடல்நலம் சரியில்லாமல் இருந்தவர்கள் ஆரோக்கியம் திரும்பக் கிடைக்கப்பெறுவீர்கள்.

மொத்தத்தில் சிம்ம ராசிக்கு இந்தபெயர்ச்சியின் மூலம் கசப்பான அனுபவங்கள் எதுவும் இல்லாமல் வாழ்க்கை சரியானபாதையில் போகும் என்பதால் கவலைகளுக்கு இடமில்லை.

ராகு கேது பெயர்ச்சி சிம்மம் ராசிக்கான சிறப்பு பலன்கள்

(குருபெயர்ச்சி – சனிபெயர்ச்சி)

ராகு-கேது பெயர்ச்சியை தொடர்ந்து எட்டு மாதங்களில் குருபெயர்ச்சியும், குருபெயர்ச்சியை தொடர்ந்து இரண்டு மாதங்களில் சனிபகவான் பெயர்ச்சியும் நடக்க உள்ளதால், இந்த ராகு கேது பெயர்ச்சி, குருபெயர்ச்சி வரை, ஒருவிதமாகவும், குருபெயர்ச்சிக்கு பின் வேறு விதமாகவும், மேலும் சனிபெயர்ச்சிக்கு பின் மற்றொரு கோணத்தில் உங்களுக்கு பலன் அளிக்க உள்ளது என்பதை மனதில் நிறுத்துங்கள். ஆனால்எப்படிப் பார்த்தாலும் இம்முறை நடக்க இருக்கும் ராகு கேதுப் பெயர்ச்சிஉங்களுக்கு ஒரு நல்ல மாற்றத்தை தரும் என்பது உறுதி.

ராகு கேது பெயர்ச்சி சிம்மம் ராசியில் – குருபெயர்ச்சி வரை

(07.03.2019 முதல் 04.11.2019 வரை)

உங்களின் மதிப்பு, மரியாதை, கௌரவம் ஆகியவை மிகவும் நன்றாக இருக்கும்.நான்கு பேர் மத்தியில் அந்தஸ்துடன் நடத்தப்படுவீர்கள். எதிர்காலத்திற்கானசேமிப்பு இந்த வருடம் இருக்கும். எப்படி வருமானம் வந்தது என்றுவெளிப்படையாக சொல்ல முடியாத சில வகைகளில் ராகுபகவான் இம்முறை உங்களுக்குவருமானங்களைத்தருவார். கமிஷன் தரகு போன்றவைகளின் மூலமாக நல்ல பெரிய தொகைஒரே நேரத்தில் ‘லம்ப்’பாக கிடைக்க வாய்ப்பு இருக்கிறது. வீட்டிற்கு தேவையானபொருட்களை வாங்க முடியும். மனதில்  உற்சாகமும் புத்துணர்ச்சியும்இருக்கும்.

ராகு கேது பெயர்ச்சி சிம்மம் ராசியில் – குருபெயர்ச்சி வரை

(04.11.2019 முதல் 24.01.2020வரை)

ஏற்கனவே தனுசில் சனி இருக்கும் நிலையில் குருவும் வந்து இணையும் இந்த சில காலம் மிக சிறந்த பொருளாதார நன்மைகளை நிச்சயம்உங்களுக்கு தரும். குடும்பத்தில் சொத்துச்சேர்க்கை, நகைகள்வாங்குதல், சேமிப்புகளில் முதலீடு செய்தல், எதிர்காலத்திற்கான திட்டங்கள்போன்றவைகளை இப்போது செய்ய முடியும்.வெளிநாட்டு ஏற்றுமதி, இறக்குமதி போன்றவைகளிலும், திரவம் சம்பந்தப்பட்டதொழில் வகைகளிலும் இருப்பவர்களுக்கு இம்முறை நல்ல வருமானம் இருக்கும்.சினிமா, தொலைகாட்சி போன்ற துறைகளில் இருப்போர் இந்த சாதகமான நேரத்தைபயன்படுத்திக் கொள்ளுங்கள்.

ராகு கேது பெயர்ச்சி சிம்மம் ராசியில் – குருபெயர்ச்சி வரை

(24.01.2020 முதல் 23.09.2020 வரை)

குருபகவானின் பார்வை உங்கள் ராசி மீது இருந்து கொண்டிருக்கும் இந்த வேளையில், சனிபகவானின் பெயர்ச்சி, உங்களை கடன்களை வாங்க செய்தாலும், வாழ்க்கையில் முன்னேறும் பாதையினை உங்களுக்கு காட்டாமல் போகமாட்டார்.

இதுவரை கருத்து வேற்றுமைகளாலும் குடும்பச் சிக்கல்களினாலும் பிரிந்திருந்தகணவன் மனைவி ஒன்று சேர்வார்கள். காவல்துறை, ராணுவம் போன்ற சீருடை அணிந்துசெயல்படும் துறையினருக்கு இதுவரை இருந்த அனைத்துப் பிரச்னைகளும் விலகிநிம்மதி இருக்கும். வீடு, வாகன, தாயார் விஷயத்தில் செலவுகள் இருக்கும்.

சினிமா, தொலைகாட்சி போன்ற துறைகளில் இருப்போர் இந்த சாதகமான நேரத்தைபயன்படுத்திக் கொள்ளுங்கள். குடும்பத்தில் சொத்துச்சேர்க்கை, நகைகள்வாங்குதல், சேமிப்புகளில் முதலீடு செய்தல், எதிர்காலத்திற்கான திட்டங்கள்போன்றவைகளை இப்போது செய்ய முடியும்.

ராகு கேது பெயர்ச்சி சிம்மம் ராசியில் பாதிப்பு யாருக்கு இருக்கும் –யாருக்கு இருக்காது

பாதிப்பு குறைய என்ன பரிகாரம்

சொல்லப்படும் பலன்கள் யாவும் துல்லியமாக அனைவருக்கும் சர்வநிச்சயமாக நடந்துவிடாது.

அதற்கு அவரவர் சுய ஜாதகத்தில் நடக்கும் தசாபுத்தி அமைப்பு முக்கியமான காரணமாக சொல்லப்பட்டாலும், பலன்கள் நடக்கும் அமைப்பை அதன் அளவை மற்றொரு முறையிலும் கண்டறிய இயலும்.

அதை பற்றி தெரிந்து கொண்டு அதற்கு உண்டான இறைவழிபாடுமற்றும் பரிகார முறைகளையும் தெரிந்துகொள்ள பின்வரும் லிங்க்-ஐ கிளிக் செய்யவும்.

ராகு கேது பெயர்ச்சி சிம்மம் ராசிக்கான பலன்கள் 2019-2020 யாருக்கு நடக்கும் நடக்காது

************************************

மேலும் ஜோதிடம் குறித்த குறிப்புகள் மற்றும் நுணுக்கமாக விசயங்கள் அறிந்துகொள்ள எமதுYouTubeசேனலானSHRI JAI SAKTHI JOTHIDAM – ஐSubscribeசெய்வதுடன் அருகில் வரும்Bell – ஐயும்Clickசெய்து கொள்ளுங்கள்.

https://www.youtube.com/c/SHRIJAISAKTHIJOTHIDAM

மேலும் சுய ஜாதக சந்தேகங்களுக்கு (கட்டண சேவை)

ஸ்ரீ ஜெய் சக்தி ஜோதிடம், திருச்சி,

(ஜோதிட ஆராய்ச்சி நிலையம்)

எளிய பரிகார ஜோதிடர், ஜோதிட ஆச்சார்யா, பிரசன்ன ரத்னா

M.M.CHANDRA SEGARAN,

(M.M.சந்திரசேகரன்)

ஆலோசனை கட்டணம் குறித்த விபரமறிய உங்களின் ஜாதகத்தை

70102-92553 அல்லது 89730-66642 என்ற எண்ணிற்க்கு வாட்சப் அனுப்பவும்

*********************************

எம்மை வழிநடத்தும் இறைகுருவுக்கும், எம்முடைய ஜோதிட ஆசான்

குருஜி உயர்திரு ஜி.கே. அய்யா (திருப்பூர்) அவர்களுக்கும், எமது மானசீககுரு

உயர்திரு ஆதித்யகுருஜி (சென்னை) அவர்களுக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்

*********************************