தலைக்கறி கிரேவி – ஆட்டு தலைக்கறி வறுவல் – thala kari varuval

0
4575
தலைக்கறி கிரேவி குழம்பு எப்படி

Contents

மிகவும் சுவையான ஆட்டு தலைக்கறி கிரேவி வறுவல்

ஆட்டு தலைக்கறி கிரேவி வறுவல் செட்டிநாடு சுவையில் செய்வது எப்படி என்று பார்க்கலாம். நாக்கில் எச்சில் ஒற்றும் சுவையில் தலைக்கறி சமைத்து அசத்தலாம்.

ஆட்டு கறியில் இந்த தலைக்கறி கிரேவி அதிக மக்களால் விரும்பி சாப்பிடப்படும் உணவாகும். ஆனால் இந்த தலைக்கறி கிரேவி சமைப்பதில் சொதப்பினால் அவ்ளோதான். அதனாலேயே அதிகம் பேர் இந்த தலைக்கறியை சமைக்க விரும்புவதில்லை.

இந்த பதிவை நீங்கள் படித்து விட்டால் இனிமேல் தலைக்கறி கிரேவி சமைக்க கவலை இனி தேவையில்லை.

தேவையான பொருள்கள்

  1. தேவையான அளவு எண்ணெய்
  2. சோம்பு ஒரு ஸ்பூன்
  3. சீரகம் ஒரு ஸ்பூன்
  4. மிளகு ஒரு ஸ்பூன்
  5. வரமிளகாய் 6
  6. ஒரு கப் அளவு தேங்காய் துருவல்
  7. கிராம்பு-2
  8. கசகசா சிறிதளவு
  9. பொட்டுக்கடலை சிறிதளவு
  10. பட்டை பூ இலை சிறிதளவு
  11. சின்ன வெங்காயம் ஒரு கப் அளவு
  12. பச்சைமிளகாய் 3
  13. தக்காளி நான்கு
  14. தேவையான அளவு உப்பு
  15. ஆட்டு தலைக்கறி 1
  16. மிளகாய்தூள் 3 ஸ்பூன்
  17. மல்லித்தூள் 2 ஸ்பூன்
  18. மஞ்சள் தூள் அரைடீஸ்பூன்
  19. தேவையான அளவு உப்பு
  20. பூண்டு
  21. இஞ்சி

தலைக்கறி கிரேவி குழம்பு எப்படி செய்வது

Uploading தலைக்கறி கிரேவி குழம்பு எப்படிதலைக்கறி செய்முறை:

  1. இஞ்சி பூண்டு விழுதை அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
  2. பின்பு அடுப்பில் கடாயை வைத்து சிறிதளவு எண்ணெய் ஊற்றி பின்னர் சிறிதளவு சோம்பு சிறிதளவு, சீரகம் சிறிதளவு மற்றும் மிளகு சேர்த்து நன்கு வறுத்து கொள்ளவும்.
  3. அவை நன்கு வறுபட்டவுடன் அதில் கிராம்பு -2 கசகசா சிறிதளவு தேங்காய் துருவி வைத்திருப்பதை அதில் சேர்க்கவும். இவை அனைத்தும் நன்கு வறுபட்டவுடன் ஒரு தட்டில் மாற்றி நன்கு ஆற வைக்கவும்.
  4. இவை ஆறியதும் மிக்ஸியில் போட்டு சிறிதளவு தண்ணீர் ஊற்றி அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
  5. தலை கறியை நன்கு கழுவி அத்துடன் சிறிதளவு மஞ்சள்தூள் சேர்த்து அதை குக்கரில் வைத்து 4 விசில் விடவும்.
  6. பின்பு அடுப்பில் ஒரு கடாயை வைத்து அதில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும் சோம்பு சிறிதளவு,  பட்டை, பூ, இலை ஆகியவற்றை சேர்த்து நன்கு வதக்கவும்.
  7. பின்னர் வெங்காயத்தை சேர்த்து நன்கு வதக்கவும். வெங்காயம் நன்கு வதங்கியவுடன் அதில் பச்சை மிளகாய் தக்காளி ஆகியவற்றை சேர்த்து நன்கு வதக்கவும்.
  8. அவையும் நன்கு வதங்கியவுடன் பூண்டு விழுது சேர்த்து நன்கு வதக்கவும். இஞ்சி பூண்டு பச்சை வாசனை போகும் வரை நன்கு வதக்கவும்.
  9. பின்பு தேவையான அளவு உப்பு சேர்த்து வதக்கவும். அதில் ஒரு டீஸ்பூன் மஞ்சள் தூள், 3 டீஸ்பூன் மிளகாய்த்தூள், இரண்டு டீஸ்பூன் மல்லித்தூள், 1 டீஸ்பூன் மட்டன் மசாலா ஆகிய தூள்களை சேர்த்து நன்கு வதக்கவும். இவை நன்கு வதங்கியவுடன் இறக்கி வைத்து கொள்ளவும்.
  10. குக்கரில் விசில் அடங்கியவுடன் அதை திறந்து அடுப்பில் வைத்து கொதிக்க விடவும். பின்பு  நாம் வதக்கி வைத்திருப்பதை குக்கரில் வெந்து கொண்டிருக்கும் தலைக்கறியுடன் கொட்டி வேக விடவும்.
  11. அவை ஒரு கொதி வந்ததும் மிக்ஸி ஜாரில் அரைத்து வைத்திருக்கும் அந்த கலவையும் இதில் சேர்த்து ஊற்றி நன்கு கொதிக்க விடவும்.
  12. இவை நன்கு வற்றிய உடன் கொத்தமல்லி தழை தூவி இறக்கவும். மிகவும் சுவையான தலை கறி கிரேவி வறுவல் தயார்.

உங்கள் நட்புகளுக்கும் உறவுகளுக்கும் கீழே உள்ள சமூக வலைதளங்களில் ஷேர் செய்யுங்கள். நன்றி.